35 வால்டர் : றித்த நாளில் கோட்டைகள் விழுந்தவுடன், மலைகள்தோறும் நெருப்பு மூட்டி, நாடு முழுவதற்கும் செய்தியை அறிவிக்க வேண்டும்! அப்படிச் செய்தால், நம் உறுதியைக் கண்டு கவர்னர்கள் நம்மிடம் உயிர்ப்பிச்சை கேட்பார்கள்! | டொபாச்சர் : கவர்னர் ஜெஸ்லர் மட்டும் எளிதில் விட மாட்டார் என்று நினைக்கிறேன். அவரை நாம் உயிரோடு வெளியேற விடுவதும் பின்னல் அபாயம்! கான்ராடு : அபாயமுள்ள இடத்தில் அடியேனை நிறுத்துங் கள்! என் உயிரை வில்லியம் டெல் முன்பு காப்பாற்றினர். இப்போது என் கெளரவத்திற்காகவும், என் நாட்டிற்காக வும் அந்த உயிரை அர்ப்பணம் செய்யத் தயாரா யிருக்கிறேன்! டிங்: அப்போதைக்கப்போது தோன்றும் யோசனைகளின் :படி சில காரியங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கும். இப்போது நேரமாகிறது. கீழ்த்திசையில் கதிரொளி பரவ ஆரம்பிக்கிறது. வெகுதுரம் செல்லவேண்டியவர்கள் இருப்பதால், இத்துடன் ஆலோசனைகளை முடித்துக் கொள்வோம்! (எல்லோரும் வணக்கத்துடன் தொப்பிகளைக் கழற்றிவிட்டுக் கீழ்த்திசையை நோக்கு கின்றனர்.) அஸல்மன் : இது முதல் நாம் ஒன்றுபட்ட சகோதரர்களாக, |37 குலமாக நிற்போம்! ஆகும் : (மூன்று விரல்களே உயரே தூக்கி) ஒன்றுபட்ட சகோதரர்களாக, ஒரே குலமாக நிற்போம்! ஜல்ழன்; அடிமைகளாய் வாழ்வதைவிட உயிரையே ;விடுவோம்! டுவோம்! ஸ்ல்மன்: ஆண்டவனே அடைக்கலம்! மனிதனுடைய அதிகாரத்திற்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம்! 卧 : அடிமைகளாய் வாழ்வதைவிட உயிரையே
பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/42
Appearance