பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-III காட்சி 1 வில்லியம் டெல்லின் வீட்டு முற்றம். இழைப்புளியால் டெல் கட்டைகளை இழைத்துக் கொண்டிருக்கிருன் , அவன் மனைவி ஹெட்விக் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கிருள். பையன்கள் வால்டரும் வில்லியமும் சற்றுப் பின்னுல் ஒரு சிறு வில்லே வைத்து விளையாடுகிருச்கள். வால்டர் ஏதோ பாடிக்கொண்டிருந்தவன் முன் புறமாக ஒடிவருகிருன். வால்டர் : அப்பா நாண் கயிறு அறுந்து போய்விட்டது இதைச் சரிப்படுத்திக் கொடுங்கள் அப்பா! டெல்: நான் மாட்டேன், கண்ணு! சரியான வேட்டைக் காரன் தானகப் பழுதுபார்க்க வேண்டும்! - (பையன்கள் பின்புறம் போகிரு.ர்கள்.) ஹெட்விக்: பசங்கள் இப்போதே அம்பு விடப் பழகுகிருர்கள் போலிருக்கிறது! டெல்: வேண்டாமா? எதிலும் வல்லவனுக வேண்டுமானல், இளமையிலேயே பழகவேண்டும்! - ஹெட்விக்: ஐயோ, இந்த வில் வித்தை தெரியாமலே இருந் தால் நல்லது! டெல்: எல்லாவற்றையும் அவர்கள் தெரிந்துகொள்வது தான் நல்லது. வாழ்க்கையிலே ஒருவன் தைரியமாகத் தன்னையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்; எதிரிக்கும் அவனிடம் அச்சம் இருக்கவேண்டும்! == ஹெட்விக்: ஆமாம், நீங்கள் தெரிந்துகொண்டதுபோதாதா? கொஞ்சங்கூட வீட்டில் தங்கவே உங்களுக்கு நேரமில்லை! டெல்: என்னுல் அது முடியாதம்மா! என் இயற்கையே அப்படி! ஆடுமாடு மேய்த்து அயர்ந்து விழுந்துகொண் டிருக்க என்னுல் இயலாது. எப்பொழுதும், எதையாவது குறி வைத்து, ஓடிச் சாடித் திரியவேண்டும்-அப்படியே வழக்கமாகி விட்டது.