பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 டல்: என் அன்பே ! உன்னை நினைத்தேன். அதனுல்தான் பல குழந்தைகளுக்குத் தகப்பனை அந்த அந்தர்வால்டன் நண்பனைக் காப்பாற்றினேன்! லுட்விக்: கொந்தளித்துப் பொங்குகிற ஏரியோடு விளை யாடலாமா? கடவுள் காப்பாற்றுகிருரா இல்லையா என்று சோதித்தது போலாகிவிட்டது ! டல்: ரொம்ப ஆலோசித்துக் கொண்டிருப்பவனல், ஒரு காரியமும் முடியாது! ஹட்விக்: ஆமாம், நீங்கள் நல்லவர், அன்போடு எல்லோ ருக்கும் தொண்டு செய்வீர்கள். ஆனல் உங்களுக்கு அவ சியம் வரும்போது ஒருவரும் பக்கத்தில் வரமாட்டார்கள்! டல்: நான் பிறர் உதவியை நாடாமலே இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும் ! (அவன் தன் பெட்டிவில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொள்கிருன்.) ஹட்விக்: வில் எதற்கு? அது இங்கேயே இருக்கட்டும்! டல் : வில் இல்லாவிட்டால் என் கைகள் விழுதுமாதிரித் தொங்கும் ! ால்டர் : அப்பா, எங்கே போகிறீர்கள்? டல்: அல்டார்புக்கு, தம்பி! நீயும் வருகிருயா ? எல்டர்: ஓ, ஜோராய்ப் போய் வருவோம் ! ஹட்விக்: கவர்னர் ಶ್ದಿಶ್ಟಿ அல்டார்பில்தான் இருக் கிருர்; அங்கே போகவேண்டாமே! டல்: இன்றைக்கு அங்கிருந்து கிளம்புகிருர். ஹட்விக்: அவர் முதலில் போய்த் தொலையட்டுமே ! உங்க ளிடத்திலே அவருக்குக் கோபம் தீர்ந்தபாடில்லை! இன் றைக்குப் போகாமல் இருந்தால் என்ன ? வேட்டைக்கு வேண்டுமானுல் போங்கள்! டல்: ஏன் என்று சொல்லேன் ! ஹட்விக்: என் மனசிலே தோன்றுவதைச் சொல்கிறேன். இதற்குக் காரணம் ஏது ?