42 களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதைவிட, கண்யமான இதயம் படைத்தவனுக்கு இனிய கடமைகள் வேறு என்ன ருக்கின்றன ? உங்கள் ஜனங்களுக்காக என் உள்ளத் 盤 உதிரம் வடிகின்றது அவர்கள் துயரப்படுகையில் அதில் நானும் பங்கு கொள்கிறேன். ஏனெனில் ஜூன் அவர்களை நேசிக்கிறேன். அவர்கள் வல்லமைமிக்க்வர் களாயிருந்தும், பொறுமையோடு அயர்ந்து கிடக்கிருர்கள். அவர்களிடம் எனக்கு மட்டற்ற மரியாதை உண்டு, நாள் தோறும் அந்த மரியாதையும் அன்பும் குன்ருமல் வளர்ந்தே வருகின்றன. ஆனால், நீயோ ?-பெற்ற பொன்னட்டைக் காக்கும் உரிமையும் கடமையும் உள்ளவன் ஆபத்து வேளையில் அதைக் காப்பதை விட்டு, எதிரியுடன் சேர்ந்து கொண்டு, தாய் நாட்டை இரும்புச் சங்கிலிகளால் இறுகப் பிணைப்பதற்கு முன்வந்து நிற்கிருய் ! உன்னைப் பார்க்கும் பொழுதுதான் எனக்குத் துக்கமும் கோபமும் பொங்கி யெழுகின்றன: நெஞ்சில் உன்மீது வெகுண்டெழும் வெறுப்பை நான் வலிந்தே அடக்கிக் கொள்ள வேண்டி யிருக்கிறது ! == ருடென்ஸ் : ஆற்றல் மிகுந்த ஆஸ்திரிய ஆட்சியின் அமைதி என் மக்களுக்கு நல்லதுதானே! என் நாட்டவரின் நன்மையைத்தானே நான் நாடுகிறேன்! பெர்தா நன்மையை அல்ல, அடிமைத்தனத்தை என்று சொல்லு-அதற்குத்தான் நீ தயார் செய்து வருகிருய்! பூமியிலே எங்காவது ஒரு மூலையிலே யாவது சுதந்திரம் தங்கியிருந்தால், அங்கிருந்தும் அதை ஒழித்துவிட நீ முயல் கிருய்! மக்கள் தங்களுக்கு உண்மையான நன்மை எது என்பதை உன்னைவிட நன்ருகத் தெரிந்திருக்கிருர்கள் ; போலியான பொருள்களால் அவர்களுடைய உணர்ச்சி களே ஏமாற்றிவிட முடியாது. ஆனல் உன்னைச் சுற்றியோ }. வலை-பதவி வலை-பகட்டான பட்டங்களின் வலை! | வந்து எனக்கு வலை விரிக்கிருய் ! ருடென்ஸ் பெர்தா! நீ என்னை வெறுக்கிருய், உதறித் தள்ளி விட்டாய் ! பெரிதா அப்படி நான் செய்ய முடிந்தால், எனக்கு அதுவே ஆகுறல், நான் இன்பத்தோடு அன்பு
பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/49
Appearance