பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 செலுத்தக்கூடிய ஒருவரைப் பிறர் கண்டிக்கவும், வெறுத்து. ஒதுக்கவும் பார்ப்பதைவிட நானே வெறுப்பதுகடென்ஸ்: ஒ பெர்தா! பெர்தா ஒரு சமயம் இன்பத்தின் எட்டாத சிகரமான வானத்தில் என்னைத் துக்கி வைக்கிருய், மறுகணத்தில் அங்கிருந்து நீயே என்னை ஆழங்காணுத அந்தகாரத்தில் அநாதையாய்த் தள்ளி விடுகிருய் ! பெர்தா : இல்லை! இல்லை! இன்னும் கொஞ்சம் நல்ல உணர்ச்சிகள் உன் உள்ளத்தில் இருக்கத்தான் செய்கின் றன! ஆல்ை அவை அயர்ந்து அடங்கிக் கிடக்கின்றனநான் அவைகளை எழுப்பிவிடுகிறேன். ஆகா, இயற்கை யாகவே உன் உதிரத்தில் ஊறிக் கிடக்கும் உன் சமுதா யத்தின் பழைய பண்பாடுகளை அழிப்பதற்கு நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாய் ! ஆல்ை, உன் நல்லதிர்ஷ்டமாக உன்னைவிட அவை வன்மையாக வேரூன்றியுள்ளன. உன் நடவடிக்கைகள் எப்படியிருந்தாலும், உன் மேன்மைக் குணங்கள் இன்னும் மறையவில்லை ! ருடென்ஸ் : ஆ, பெர்தா ! என்னிடம் உனக்கு இன்னும் நம்பிக்கை யிருக்கிறது. உன் காதல் எனக்கு எல்லா வற்றையும் அளித்து என்னை உயர்த்திவிடும்! பெர்தா : அப்படியால்ை, இயற்கை உனக்கு வரமளித்து நிறுத்தியுள்ள நிலையிலேயே நீ நின்ருல் போதும்; உன் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும், பரிந்து முன் வந்து நில் ! உங்கள் புனித உரிமைகளுக்காகத் துணிந்து போராடு! ருடென்ஸ் : ஆல்ை உன் விஷயம்-சக்கரவர்த்தியின் ஆணையை நான் ஒரு முறை எதிர்த்து நின்ருலும், பிறகு என் ஆருயிர் என்று சொல்லவே ஒன்றும் இராமல் போகும்! கொடிய உறவினர் சிலருடைய வற்புறுத்தலுக்கு மீ அடங்காமலிருக்க முடியுமா ? பெர்தா : என் நிலங்களெல்லாம் இந்த நாட்டில்தானே இருக் கின்றன . சுவிஸ் மக்களின் சுதந்திரமே எனக்கும் விடுதல் ருடென்ஸ் : பெர்தா! திடீரென்று சுவர்க்கத்திற்கு எனக்கு so வழிகாட்டியது போலிருக்கிறது !