பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

 வால்டர்: காட்டிலாவது வேட்டையாடலாம் அல்லவா?

டெல் : காடும் காட்டு மிருகங்களும் பிரபுக்களுக்குச் சொந்தம்!

வால்டர் : ஆறுகளில் மீனாவது பிடிக்கலாமா?

டெல் : ஆறுகள், ஏரிகள், உப்புப் பாத்திகள் எல்லாம் மன்னருடையவை!

வால்டர் : அந்த மன்னர் யார்? எல்லோரும் அவருக்குப் பயப்படுகிறார்களே!

டெல் : அவர் வல்லமையுள்ளவர், அவர்களுக்கெல்லாம் உணவளித்துக் காப்பவர்.

வால்டர்: அவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் வீரம் இல்லாதவர்களோ?

டெல் : அங்கே ஒரு வீட்டுக்காரன் அண்டை வீட்டுக்காரனை நம்பமாட்டான்.

வால்டர் : அந்தமாதிரி நாடு நமக்கு வேண்டாம், அப்பா! பனிப் பாறைகள் உருண்டாலும், இங்கேயே இருப்போம்!

டெல் : ஆமாம், கண்ணு! இந்தப் பனிமலைகளை அரணாக நம்பி வாழ்ந்தாலும் வாழலாம், தீய மனிதர்களை நம்பி வாழமுடியாது !

[அவர்கள் முன்னே கடக்கின்றனர்.]

வால்டர் : அப்பா, அதோ பார்த்தீர்களா! கழி மேலே ஒரு குல்லாய்!

டெல் :எந்தக் குல்லாவானால் நமக்கென்னடா? வா, நாம் போவோம்!

[அவன் வெளியேறும் சமயத்தில் பிரிஷார்ட் சென்று ஈட்டியை அவன்முன்பு நிறுத்தி மறிக்கிருன்.]

ரிஷார்ட்: நில்லு__சக்கரவர்த்தியின் ஆணை! மேலே போகாதே, நில்லு!

டெல் : (ஈட்டியை ஒருபுறம் தள்ளிக்கொண்டு) என்ன செய்ய வேண்டும்? என்னை ஏன் வழி மறிக்கிறீர்?

ரிஷார்ட் சர்க்கார் கட்டளையை மீறி நடந்திருக்கிறாய், எங்களோடு கச்சேரிக்கு வரவேண்டும்!

அ__4