உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

 லிதோல்ட் : அந்தத் தொப்பியை நீ வணங்காததுதான் குற்றம்!

டெல் : நண்பர்களே, பேசாமல் என்னைப் போகவிடுங்கள்

பிரிஷார்ட் : இவனைச் சிறைச்சாலைக்கு அழைத்துப் போ!

வால்டர் : என் அப்பாவா சிறைச்சாலைக்கு! ஐயோ, அநியாயம், அநியாயம் ஏ ஜனங்களே ! இங்கே ஓடிவாருங்கள் அப்பாவை விடுதலைசெய்ய வாருங்கள்!

[பாதிரியார் ரோஸல்மன்னும், ஆலயத் தர் கர்த்தா பீட்டரும் வேறு மூவருடன் வாழுகின்றனர்.]

பீட்டர் : இங்கே என்ன விஷயம் ?

ரோஸல்மன் : அந்த மனிதன்மீது கை வைப்பது யார்? பிரிஷார்ட் அவன் சக்கரவர்த்தியின் எதிரி, இராஜத்துரோகி

ரோஸல்மன் : அப்படி யிராது, தம்பி! அது வில்லியம் டெல் அல்லவா__நேர்மையான நல்ல மனிதன்!

வால்டர் : (தன் பாட்டனார் பெரிய வால்டர் வருவதைக் கண்டு அவரிடம் ஒடிக்கொண்டு) தாத்தா, தாத்தா! அப்பாவை இவர்கள் பிடித்துக்கொண்டு போகிறார்கள் சீக்கிரப் வாருங்கள்! பிரிஷார்ட் : ஊம், வா ஜெயிலுக்கு!

பெரிய வால்டர் : (வேகமாக வந்து) நில்லுங்கள்! நான் ஜாமீன் கட்டுகிறேன்! ஏ கடவுளே, இங்கு என்ன நடந்தது? டெல் நடந்ததைச் சொல்லமாட்டாயா?

[மெல்ச்தலும் ஸ்டாபர்ச்சரும் வருகின்றனர்]

பிரிஷார்ட் ; மேன்மை தங்கிய கவர்னருடைய உத்தரவை அவன் எதிர்த்திருக்கிறான்!

ஸ்டாபாச்சர் : டெல்லா அப்படிச் செய்தார்?

மெல்ர்தல் போக்கிரி, பொய் சொல்லுகிறான்!

லிதோல்ட் கவர்னருடைய தொப்பியை அவன் வணங்கி வில்லை__அதுதான் விஷயம்!