57 ஸ்டாபாச்சர் : இப்பொழுது ஆத்திரம் பயனற்றது! நம்மிடம் ஆயுதங்களில்லை-சுற்றிலும் பார், காடுபோல ஈட்டிகள் விளைத்துக்கொண்டு நிற்கின்றன! மெல்ச்தல்: ஐயோ, நாம் செய்யத் தீர்மானித்ததைச் சிறிது முன்னதாக வைத்துக்கொள்ளத் தவறிவிட்டோம். தாமதித் துப் பின்னுல்தான் போராட்டம் தொடங்க வேண்டுமென்று யோசனை சொன்னவர்களைக் கடவுள்தான் மன்னிக்க வேண்டும்! ஜெஸ்லர் : (டெல்லிடம்) இந்த அடிமை நாட்டில் இனி யாருமே வில், அம்பு, கொலைக்கருவிகளைத் தூக்கித் திரியக்கூடாது! அம்புகள் வைத்திருப்பவன் மீதே அம்பு திரும்பிப் பாயும்! ஆனல், நீ வில்லோடு நடமாட விரும்பில்ை, அதை அது மிதிக்கிறேன்-அதற்கு நான் சொன்னபடி குறிபார்த்து அடிக்க வேண்டியதுதான்! டெல் : (வில்லை வ&ளத்து அம்பைப் பொருத்திக் கொண்டு) அங்கே, வழியை மறைக்காதீர்கள் ! ஸ்டாபாச்சர் : என்ன, டெல்? உன்னுல் முடியாது-ஒரு போதும் முடியாது!-உன் உடலே_நடுங்குகின்றதே! கை நடுங்குகின்றது, காலும் தள்ளாடுகின்றதே! டெல்: (வில்லை நழுவவிட்டு-வில்லே காற்றில் மிதப்பது போலல்லவா கண்ணுக்குத் தோன்றுகின்றது! பெண்கள் : இனி கர்த்தரின் கருனைதான் காக்க வேண்டும்! டெல் : மன்னியுங்கள், ஐயா! அம்பு விட முடியாது! இதோ இருக்கிறது என் இதயம். நன்ருய்ப் பார்த்துக் கொள்ளுங் கள்! உங்கள் குதிரை வீரர்களைக் கூப்பிடுங்கள்! என் உடல் மீது குதிரைகளை ஒட்டி என்னை நசுக்கிவிடுங்கள்! ஜெஸ்லர்: எனக்கு வேண்டியது உன் உயிரல்ல-குறி தவ ருத அம்புதான்!.... மகாவீரனல்லவா நீ பெரும் புயலிலே கூட்ட ஒருவ்னைக் காக்க வேண்டுமானல் ஏரியில் துணிந்து ஒடம் ஒட்டுவாயே! எல்லோரையும் காப்பாற்றும் நீ இப் போது உன்னையே காத்துக்கொள்ள முடியாதா, என்ன (டெல் மனத்துள் நிகழ்ந்து கொண்டிருந்த பயங்கரப் போராட்டத்தின் விளேவாக உயரே வானத்தையும், ஒரு சமயம் கவான
பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/64
Appearance