பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ரையும் பார்க்கிருன்; திடீரென்று த புட்டிலிலிருந்து இரண்டாவது அ1 ஒன்றை உருவி அதை நெஞ்சில் சட்டை குள் மறைத்து வைத்துக் கொள்கிருன்.) வால்டர் : (மரத்தடியில்)-அப்பா வில்லை வளையுங்கள்; என குப் பயமேயில்லை ! தைரியமாய் அம்பு விடுங்கள். டெல் : (மிகவும் முயற்சி செய்து)-நடந்துதான் ஆகவேண்டு போலிருக்கிறது ருடென்ஸ்: (இவ்வளவு நேரமும் மிகுந்த மனக் குழப்பத்துடன் நின்று கொண்டிருந்து விட்டுத் தன்னை அடக்கிக் கொள் முடியாமல்) இந்த வேலை இத்துடன் நிற்கட்டும், ိါ உங்கள் வல்லமையைக் காட்ட இவ்வளவே போதும். அவ வுக்கு மிஞ்சில்ை, கொடுமையும் பயனற்றுப் போகும் அதிகமாய் வளைத்த வில் தூள்தூளாக ஒடிந்துவிடும். ஜெஸ்லர்: இளைஞனே, உன்னிடம் நான் யோசனை கேட் வரும்வரை வாயை மூடிக்கொண்டிரு! ருடென்ஸ்: நான் பேசித்தான் ஆகவேண்டும், பேசவும் செய வேன்! அரசரின் கெளரவத்தில் எனக்கும் அக்கை உண்டு. ஆல்ை, இத்தகைய கொடிய செயல்களால் அவ மேல் வெறுப்பு வளரும். இங்கு இப்பொழுது நடப்பது மன்னரின் உத்தரவுப்படிதான? இதை அவர் கனவிலும் கருதியிருக்க முடியாது என்று எனக்குத் தெரியும். அது நிச்சயம். என் நாட்டு மக்களுக்கா இந்தக் கொடுமை உங்கள் அதிகார வரம்பை நீங்கள் மீறிப்போகிறீர்கள் ! ஜெஸ்லர்: ஆகா, உனக்கே. இவ்வளவு தைரியம் வந்து விட்டதா? ருடென்ஸ் : எண்ணத் தொலையாத கொடுமைகளை யெல்லாம் கண்டிருந்தும், வாய்மூடி மெளனியாயிருந்தேன். பார்த்துப் பார்த்து என் இரு கண்களும் ஒளியைப் பார்க்கவே கூசி விட்டன. பொங்கியெழுகின்ற குமுறலையும் கோபத்தையும் அடக்கி அடக்கி நெஞ்சும் கருகிவிட்டது; இனியும் வாயடைத்திருந்தால், அது அரசருக்கும், என் அருமைத் தாய்நாட்டிற்குமே துரோகமாகும்!