59 நிபர்தா: (அவனுக்கும் கவர்னருக்கும் இடையே பாய்ந்து கின்று)அட ஆண்டவனே! (ருடென்ஸைப் பார்த்து). எரிகிற நெருப் பிலே நீயுமா எண்ணெய் ஊற்றவேண்டும்? குடென்ஸ்: இதற்காகத்தானு என் மக்களுக்கு இவ்வளவு காலம் நான் துரோகம் செய்துவந்தேன்? மன்னரை அண்டியிருந்தால், என் மக்களும் அமைதியாக வாழமுடியும் என்று நம்பி நம்பி மோசம் போனேன்! என் கண்களை மறைத்திருந்த திரை அகன்றுவிட்டது என் நடத்தை பயங்கரப் பாதலத்தில் கொண்டு சேர்த்துவிட்டது. நல்ல எண்ணத்துடனேயே என் மக்களுக்கு நாசம் தேடிவிட் டேன்! என் சிந்தனையை நீங்கள் சிதறச் செய்து விட்டீர்கள், என் இதயத்திலேயே விஷத்தைக் கலந்து விட்டீர்கள் h ஜெஸ்லர்: துடுக்குடன் மிடுக்காகப் பேசுகிருய்! எனக்கு அடங்கிய பிரபுக்களில் ஒருவகிைய நீ என்னிடமே நடென்ஸ்: மன்னரே எனக்கு மேலேயுள்ள பிரபு, நீரல்ல! உம்மைப் போலவே நானும் சுதந்திரமாய்ப் பிறந்தவன், வீரனுக்குரிய பண்புகளில் உமக்கு நான் குறைந்தவனு மல்லன்! மன்னரின் பெயரால் பதவியிலுள்ள அதிகாரி, அந்த அதிகாரத்திற்கே அவமானத்தைத் தேடியபோதிலும், மன்னரின் மாட்சிக்கு மரியாதை வைக்கிறேன். ஆயினும், கூப்பிடும் உமது படை வீரர்களை !-இதோ சவால் விடு கிறேன்!-நான் இவர்களைப் போல (குடியானவர்களேச் சுட்டிக்காட்டி) ಡ್ಗಿ=ಿಡಿ! நெடிய வாள் பற்றி நிற்கிறேன்! போராடச் சொல்லும் உம் வீரர்களை ! முதலில் எவர்கள் வருகின்றனர் ? m o ஸ்டாபாச்சர்: (உரத்த குரலில்)-அதோ ஆப்பிள் விழுந்து விட்டது ! (எல்லோரும் ஜெஸ்லருக்கும் ருடென்ஸுக்கும் நிகழ்ந்த சொற்போரைக் கவனித்துக் கொண்டிருக்கையில், டெல் ஆப்பிக்ள அம் பால் அடித்துத் தள்ளிவிட்டான்.) ரோஸல்மன் : பகவானே, உன் அருளால் பையனுக்குச் சேத மொன்றுமில்லை!
பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/66
Appearance