பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 ஸ்டாபாச்சர்: எ ழுந் தி ரு, டெல்-நிம்மதியாயிரு!-வீரன் வேலையை வீரத்தோடு முடித்துவிட்டாய் ! இனி வீட்டுக்குப் போகலாம், வா! ாஸல்மன்: வாருங்கள், வாருங்கள்! பெற்றவளிடம் முதலில் 'பிள்ளையைக் கொண்டுபோய்ச் சேர்ப்ப்ோம், வாருங்கள் ! (அவர்கள் டெல்லே வெளியே அழைத்துப் போக ஏற்பாடு செய்கின்றனர்.) இஜஸ்லர்: டெல், சற்று நில்! டெல் : (திரும்பி வந்து)-ஐயா, என்ன ? ஜஸ்லர்: இரண்டாவது அம்பு ஒன்று எடுத்தாயே-அதை உன் மார்புச் சட்டைக்குள் வைத்ததை நான் பார்த்தேன்! அந்த அம்பு எதற்காக ? திடல்: (திகைப்படைந்து)-ஐயா, அதுவா? அது வில்லாளர் வழக்கம் ! ஜெஸ்லர் இல்லை, டெல், உன் மறுமொழியில் எனக்குத் திருப்தியில்லை. வேறு காரணம் இருக்கிறது-முக்கியமான் காரணம் டெல், உண்மையைச் சொல்லு, ஒளிவு மறை வின்றிச் சொல்லு அது எதுவாயினும் கவ்லையில்லைட் உன் உயிருக்கு ஒரு கேடும் வராது! இரண்டாவது அம்பு எதற்காக ? நிடல் : ஐயா, என் உயிருக்குத் தாங்கள் அபயம் கொடுத்து விட்டதால், உள்ளதையே சொல்லிவிடுகிறேன்! (மார்பில் மறைந்திருந்த இரண்டாவது அம்பை வெளியே எடுத்து, பயங்கரமாக ஒரு முறை ஜெஸ்லரைப் பார்ததுக் கொண்டு) இந்த இரண்டாவது அம்பு உமக்கு நேர்ந்து வைத்த ஆம்பு முதல் அம்பு குறி தவறி என் குழந்தையைக் கொஜல் செய்திருந்தால், இது குறி தவருமல் நிச்சயம் உம்மைத் தீர்த்திருக்கும் ! நிஜஸ்லர்: நல்லது, அப்படியா, டெல் ! உன் உண்மையை மெச்சினேன்! உனக்கு முதலிலேயே நான் உயிர்ப் பிச்சை அளித்துவிட்டதை இப்பொழுதும் மாற்றவில்லை. ஆளுல் உன் உள்ளத்திலுள்ள விஷம் வெளிவந்து விட்டது இனி