உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 பெரிய வால்டர்: யார் அது? கோன்ராடு: உன் மகள், ஹெட்விக்! உன்னிடம் பேச வேண்டுமாம்; குழந்தை வால்டரையும் பார்க்கவேண்டுமாம்! நிபரிய வால்டர்: (எழுந்துகொண்டு) நானே ஆறுதலின்றித் தவிக்கிறேன்; அவளுக்கு நான் என்ன சொல்லப் போகிறேன்! எல்லாத் துக்கமும் என் தலைமேலேதான்! ஹெட்விக்: (வேகமாக ஓடிவந்து) என் குழந்தை எங்கே? அவனை நான் பார்க்க வேண்டும்-பார்த்தாக வேண்டும்! ஸ்டாபாச்சர்: அமைதியாயிரு, அம்மா! கிழவர் மரணுவஸ்தை யில் கிடக்கிறர்! ஹெட்விக்: ஒ வால்டர், என் கண்மணி ' உயிரோடு வந்து சேர்ந்தாயா, கண்ணு ! வால்டர் : அம்மா ! ஹெட்விக்: அது உண்மைதான? நீ காயமில்லாமல் தப்பி விட்டாயா? (கவலேயோடு ஆத்திரமாக அவனை உற்றுப்பார்த்து.) அப்படியும் நடந்திருக்குமா? உன்னைப் பார்த்தா அம்பு ஆந்தது? ஆவரல் எப்படி முடிந்தது? தன் குழந்தை மீதே அம்பு தொடுப்பவருக்கு இதயமே இருந்திராது! பெரிய வால்டர் : (அளவில்லாத துக்கத்தோடு) அவர் அப்படிச் செய்ய நேர்ந்தது-இருவர் உயிரையும் காப்பதற்காக்! * ஹெட்விக்: அப்படி அம்பு விடுவதைவிடத் தாமே அந்த இடத்தில் உயிரை விட்டிருக்கலாமே! ஸ்டாபாச்சர்: இருவரும் உயிர் பிழைத்ததற்கு நீ கடவுளைக் கும்பிட வேண்டும்! ஹெட்விக்: என்ன ஆகியிருக்கும் என்று எனக்குத் தெரி யாதா? கர்த்தரின் கருணைதான் காப்பாற்றியிருக்கிறது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தாலும், நான் இதை மறப்பேன? மகனைக் கட்டி வைத்து, அவன் மேலே தகப்பன் விட்ட அம்பு என் நெஞ்சில் பாய்ந்து கொண்டே யிருக்கும்! மெல்ச்தல்: அவன் அப்படிச் செய்யும்படி எவ்வளவு கட்டாயப் படுத்தப்பட்டான், தெரியுமா உனக்கு ?.