உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பு எய்த பழம்

அங்கம்-1

காட்சி 1

பாறைகள் அடர்ந்து உயர்ந்த ஏரிகரை, கரை அருகில் ஒரு குடிசை. செம்படவச் சிறுவன் ஒருவன் ஒடத்தைக் கரை நோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கிரறான். ஏரியின் எதிர்க்கரையில் சுவிஸ் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களும், பண்ணை வீடுகளும், பசும் புல்தரைகளும் கதிரொளியில் தென்படுகின்றன. இடதுபுறம் மேகங்கள் அடர்ந்த மலைச் சிகரங்கள். வலது புறம் தொலைவில் பனி மலைகள். திரை உயருமுன்பே மந்தை சாய்ந்து வரும் மாடுகளின் கனப்பும், மணி ஒசைகளும் கேட்கின்றன. காட்சி ஆரம்பித்த பின்னும் சிறிது நேரம் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.


சம்படவச் சிறுவன்: (ஒடத்திலிருந்தபடி பாடுகிறான்.)

ஆயன் : (மலைமீது இருந்தபடி) இனிமேல் புல்லேது, புதரேது? கோடையோ கழிந்துவிட்டது! மலைப் பரம்புகளே ! புல் நிறைந்த பள்ளத்தாக்குகளே ! நாங்களும், எங்கள் ஆடு மாடுகளும் இனி வேறிடம் பார்க்க வேண்டியதுதான்! வசந்த காலம் வந்து, குயில்கள் கூவி, மலர்கள் மலரும் போதுதான் மறுபடி வருவோம்!

"ஆல்ப்ஸ் மலே வேடன் எதிர்ப்புறம் பாறைகளின் மீது தோன்றுகிறான்.

உயரே இடிகள் உறுமுகின்றன : பாலம் நடுங்கி ஆடுகின்றது : தலை கிறங்கும் உயரத்தில் நிற்கும் அந்த வேடன் மட்டும். சிறிதும் அஞ்சவில்லை. பயமில்லாமலே அவன் பனிமலைகளின் மேலே பாய்ந்து செல்கிறான்! அந்த உச்சியில் பூக்கள் பூப்பதில்லை. பார்க்கும் பக்கமெல்லாம் பனி, பனி,