பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 மீனைப்போல், எப்படித் துடிக்கிருரோ சிறகொடிந்த பறவை போல், என் கணவர் இருட்டறையில் எத்தனை நாள் இருப்பார்! ஸ்டாபாச்சர் : அக்கா கொஞ்சம் பொறுமையாயிரு நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவன் சிறையை உடைத்தெறிய இயன்றதை யெல்லாம் செய்வோம்! ஹெட்விக்: அவரில்லாமல் நீங்கள் மட்டும் என்ன செய்ய முடியும்? அவர் ஒருவர் உங்கள் எல்லோருக்கும் காப்பாக இருந்தார்-நீங்கள் அத்தனை பேரும் சேர்ந்து அவரைக் காக்க முடியவில்லையே! (வெர்னர் பிரபு விழிப்படைகிரு.ர்.) கோன்ராடு : பேசாதேயுங்கள்! அவர் அசைகிருர், பாருங்கள்! வெர்னர்: அவன் எங்கே? ஸ்டாபாச்சர்: யார்? வேர்னர் : அவன் இல்லையா? மூச்சுப் போகும் வேளையிலும் பக்கத்தில் இல்லையா? ஸ்டாபாச்சர்: மருமகனைத் தேடுகிருர். உடனே அழைத்து வர ஆளனுப்புங்கள்! பெரிய வால்டர்: நாங்கள் அப்போதே ஆள் அனுப்பி விட்டோம். கவலை வேண்டாம்: ருடென்ஸ் பிரபு மனம் மாறிவிட்டார்-இப்போது நம் பக்கம்தான்! வெர்னர்: நம் நாட்டுக்காக அவன் பரிந்து பேசினது உண்மைதானே? ஸ்டாபாச்சர்: வெறும் பேச்சா-வீரத்துடன், ஆணித்தரமாகப் பேசினர்! வெர்னர் : அப்படியானல், கடைசியாக நான் கண்ணை மூடு முன்னுல் என் ஆசியை அவன் பெறவேண்டாமா? சீக்கிரம் என் விஷயம் முடிந்துவிடும்-இனி நீடிக்காது! ஸ்டாபாச்சர் : ஐயா, அப்படியில்லை! கொஞ்சம் ஒய்வெடுத்த பின்பு, இப்பொழுது உங்கள் கண்கள் பிரகர்சமா யிருக் கின்றன.