பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வெர்னர் : வாழ்வே துக்கம்தான்! அதுவும் இதோ முடியப் போகிறது! o (அருகிலிருந்த வால்டரைக் கவனித்து) இந்தப் பொடியன் யார்? பெரிய வால்டர்: உங்கள் பேரன்-அவனை உங்கள் வாயால் வாழ்த்துங்கள்! தகப்பனில்லை (ஹெட்விக் குழந்தையுடன் அவர் முன்பு வணங்குகிருள்.) வெர்னர் : தகப்பனில்லாமலே உங்கள் எல்லோரையும் விட்டுப் போகிறேன்! கடைசியாக என் நாட்டின் வீழ்ச்சி யைப் பார்த்துவிட்டா என் கண்களை மூடவேண்டும்! என் நம்பிக்கை யெல்லாம் சிதறுண்டு போகவா நெடுமரம் போல இத்தனை வயது வாழ்ந்து வந்தேன்! ஸ்டாபாச்சர்: வீரத் தந்தையாரே! மனம் தளர வேண்டாம் எங்களுக்கு இன்னும் நம்பிக்கை யிருக்கிறது-நாட்டை விடுதலை செய்தே தீருவோம்! வெர்னர்: யாரைக் கொண்டு? பெரிய வால்டர் : எங்களைக் கொண்டே கேளுங்கள்! மூன்று மாவட்டங்களும் சேர்ந்து கொடுங்கோலரை விரட்ட உறுதி செய்துவிட்டன. ஒற்றுமை உறுதியாகிவிட்டது; எல் லோரும் சத்தியம் செய்திருக்கிருர்க்ள். வருடம் முடியு முன்பே போராட்டம் வெற்றியோடு முடியும். துளியும் சந்தேகமில்லை! சுதந்திர பூமியிலேதான் உங்கள் சமாதி நிலைத்திருக்கும்! வெர்னர் : ஒற்றுமை உறுதியாகிவிட்டதா, சொல் மெல்ச்தல்: மூன் மாவட்டங்களும் ஒரே நாளில், ஒரே மூச்சாக எழும் ஏற்பாடெல்லாம் முடிந்துவிட்டது! நூற்றுக் கணக்கான நம்மவருக்கு மட்டுமே விஷயம் தெரியும். எல்லாம் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. நாள் நெருங்கிவிட்டது. இனி அந்நியர் இங்கே வாழ்ந்த தடமே தெரியாமற் போய்விடும்! வெர்னர்: நாட்டுக்குள்ளே அமைந்திருக்கும் அவர்களுடைய வலிய கோட்டைகள்?