உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 திருந்த ஈட்டிகள்-சமுதாடுகள்-வேல்கள்-வாள்கள் எல் லாம் வளைந்து நின்றபோதிலும், வெறும் கையோடு நின்ற நம் குடியானவர்கள் எப்போதாவது அஞ்சினர்களா?. திறந்த மார்புடன் எதிரிகளின் ஆயுதக் காட்டின் மீது பாய்ந்தார்கள்: ஈட்டிகள் ஒடிந்தன, சமுதாடுகள் சாய்ந்தன-ஒரு பாவமும் அறியாத நம் வீரக் குடியானவரே வெற்றி பெற்று வந்தனர்! வாழையடி வாழையாக வந்த சமுதாயம் இது (பெரிய வால்டர், ஸ்டாபாச்சர் இருவர் சை களேயும் எட்டிப் பிடித்துக்கொண்டு) நீங்கள் உறுதியோடும், நிலைத்த விசுவாசத்தோடும் இருங்கள்-அப்ாய காலங்களில் உங்கள் மலைகளின் மீது அடையாளங்கள் காட்டினல், கூட்டம் கூட்டமாக மக்கள் ஒருவருக்கொருவர் உதவியாக ஓடி வரவேண்டும் ஒரே இனமாயிருங்கள்-ஒரே-ஒரே (இருவர் கைகளையும் பற்றியபடியே மெத்தை யில் சாய்கிரு.ர். பெரிய வால்டரும் ஸ்டா பாச்சரும் சிறிது நேரம் அவரையே பார்த் திருந்து விட்டுத் துக்கத்தை மறைத்துக் கொள்ளச் சற்று விலகி நிற்கின்றனர். கட்டிலருகில் வேலேயாட்க ர், அமைதியாக வந்து, அழுதுகொண்டு முழங்தாள் பணிந்து விழுகிரு.ர்கள். மாளிகையிலுள்ள மணி ஒலிக்கின்றது.) (ருடென்ஸ் வேகமாக வருகிருன்.) ருடென்ஸ்: என்ன, எப்படி யிருக்கிருர் ? உயிர் இருக்கிறதா? நான் பேச முடியுமா? பெரிய வால்டர்: நீங்கள்தான் இனிமேல் எங்கள் _ பிரபு இந்தப் பழம் பெரும் குடும்பத்திற்கு இனி நீங்களே தலைவர்! ருடென்ஸ்: இறைவன் சித்தம் போலும் ! என்_கழிவிரக்கம் காலம் கட்ந்துவிட்டதா! என் உள்ளம் மாறிவிட்டதைப் பாராமலே என் மாம்ன் போய்விட்டாரா! என்றும் மீளாத படியே சென்றுவிட்டாரா! அவர் தெளிவோடிருந்த காலத் தில் எனக்குச் செய்த உபத்ேசத்தை நான் வெறுத்தேன். இப்பொழுது அவரே போய்விட்டார்! அவருக்கு நான்