உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 ஆயுள் முழுதும் கடமைப்பட்டிருக்கிறேன். ஐயோ, சொல் லுங்கள்-அவர் என்னிடம் கோபத்தோடா ஆவி பிரிந்தார் ? ஸ்டாபாச்சர் : நீங்கள் செய்ததை யெல்லாம் கேட்டுவிட்டு, உங்களுடைய பேச்சின் வீரத்தை மெச்சிக்கொண்டே பிரிந்தார் ! ருடென்ஸ்: (கட்டிலருகே முழந்தாளிட்டு) ஆவிபிரிந்த இந்தப் புனித உடலின் அருகே சபதம் செய்கிறேன்! மாமா, உமது திருக் கையில் அடித்துச் சத்தியம் செய்கிறேன்! இனி அந்நியர் உறவு அணுவளவும் கொள்ளேன். ! என் இதயம் முழுதும் இனி என் நாட்டு மக்களுக்குத்தான்! இனி என்றைக்கும் நான் சுவிஸ் தாயின் மகன் ! (எழுந்து கொண்டு) நமக்கு உற்றவர்-நம் எல்லோருக்கும் தந்தை - அவருக்காகத் துக்கம் கொண்டாடுங்கள்! அவரிடமிருந்து சொத்து, சுகங்களை மட்டும் நான் வாரிசாகப் பெறவில்லை... இதோ அவர் ஆவியே என்மீது படர்ந்திருக்கின்றதுஅவருடைய துரிய வீர உள்ளம் என்னுள் பாய்ந்திருக் கின்றது! வயது காலத்தில் அவர் கொண்டிருந்த கருத்தை I H H யெல்லாம் வாலிபமாக உள்ள நான் நிறைவேற்றுவே ஐயா, உமது கையை இப்படிக் கொடும்! மெல்ச்தல், கை குலுக்குவோம், வா! யோசிக்க வேண்டாம், கை கொடு என் வாக்குறுதிகளை நம்புங்கள் ! என் சத்தியத்தை நம்புங்கள் ! பெரிய வால்டர்: கை கொடு; அவர் உள்ளம் பரிசுத்தமா யுள்ளது, அதை நம்பவேண்டும் ! மெல்ச்தல்: குடியானவன் என்ருலே உங்களுக்குக் குமட்டலா யிருக்குமே! இனி எப்படி இருப்பீர்களோ ? ருடென்ஸ் : இளமையின் தவறுகளை மறந்துவிடுங்கள்! ஸ்டாபாச்சர்: ஒன்ரு யிருங்கள்!-என்றுதானே நம் தந்தை முடிவாகச் சொன்னர்-அது நினைவிலிருக்கட்டும்! மெல்ச்தல்: இதோ என் கை! இது மேழி பிடிக்கும் கை, மேதினியை வாழ்விக்கும் கை, உண்மையின் உறைவிட மான கை !