பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 பெரிய வால்டர் : (ருடென்ஸைப் பார்த்து) என்ன செய்ய உத்தேசம் ? இடென்ஸ்: எதிரிகளின் எல்லாக் கோட்டைகளையும் முதலில் தகர்த்தெறிய வேண்டும்! மெல்ச்தல்: சரி, வந்து தலைமையை ஏற்று நடத்துங்கள் ! எல்லோரும் பின்பற்றிப் பாயத் தயார்!- இன்றே செய்ய வேண்டிய்தை நாளைக்கு ஒத்திப்போட வேண்டியதில்லை ! ரூட்லி மகாநாடு நடக்கையில் டெல் வெளியேயிருந்தான். பயங்கர ஆப்பிள் நாடகமும் நடக்கவில்லை! நிலைமை மாறி விட்டது! அதற்குத் தக்கபடி திட்டத்தையும் மாற்றிக் கொள்வோம் ! ருடென்ஸ்: ஆயுதங்களோடு வந்து சேருங்கள்! மலைகளின் மீது சோதி தெரிவதைக் கவனித்துக் கொண்டிருங்கள் ! அது நம் வெற்றிக்கு அடையாளம். உடனே நீங்களும் பெருந் தீயை மூட்டி வரவேற்கத் தயாரா யிருங்கள் ! எதிரிகளை எல்லா இடங்களிலும் இடிபோல் தாக்குவோம்! வீழ்க கொடுங்கோல்! (அவர்கள் போகிரு.ர்கள்.) காட்சி 3 குஸ் குட்டின் அருகில் குன்றுகளிடையே அமைந்த ஒடுக்கமான பாதை. வழிப்போக்கர்கள் நடந்து செல்கிருர்கள். பாதைக்கு மேலே ஒரு பாறை முன்பக்கமாக நீண்டு புதர்கள் அடர்ந்து விளங்கு கின்றது. (டெல் வில்லுடன் வருகிருன்.) திடல் : (தனக்குள்) குஸ்ட்ைடுக்கு வேறு பாதை கிடையாது; 屬 ஒடுக்கமான பாதை வழியாகத்தான் அவர் வர வண்டும்! இங்குத்தான் என் வேலையும் முடியவேண்டும்! நல்ல தருண்ம். மேலே செடிகள் அடர்ந்த பாறை ஏற்ற மறைவிடம்தான். அங்கிருந்து விடும் அம்பு நெஞ்சில் பாய்ந்தே தீரும் வன விலங்குகளுக்காக வைத்திருந்த என் வில் இப்போது வேறு வேலை செய்யப்போகிறது. கள்ளமில்லர்ம்ல் காடுகளில் சுற்றிக் கொண்டிருந்த