80 என்னைப் பிடித்துக் கவர்னர் நல்ல பாடம் கற்பித்து விட்டார்! கொடுமையில் எத்தனை வகை உண்டென்! காட்டிவிட்டார். என் உள்ளமும் இரும்பாகிவிட்டது ஏதும் அறியாத என் பாலர்கள், என் மனைவி இவர்களை சும்மா விடமாட்டாய் ! உன் வெறியிலிருந்து அவர்கை நான் காக்க வேண்டும். சின்னஞ்சிறு குழந்தையின் தலையைக் குறி வைக்க சொன்னுய் கெஞ்சினேன், நீ கேட்கவில்லை. வெடிக்கு உள்ளத்தில் அப்போதே சபதம் செய்தேன்-அது ஆண்டவர் ஒருவருக்கே தெரியும். இந்த இரண்டாவது அம்பை அப்போதே உனக்காக எடுத்து வைத்துவிட்டேன் செய்த சபதம் வீண் போகவில்லை. உனக்கு நேர்ந்து வைத்த அம்பை உனக்கே சேர்த்துவிடுகிறேன் ! இரக்க துழையாத உன் நெஞ்சில் என் பாணம் நுழைந்தே தீரும் என் செல்வன் தலைமீது பாய்ந்த அம்பு என் குலப்பகைவன் உள்ளத்தில் பாயாமல் தப்புமா ? வில்லே, இதுவரை நீ வெறும் சுமைதான்-இன்றுதான் வீர வில்லாக விளங்கவேண்டும்! இந்த நேரத்தில் என்னை கைவிட்டுத் தவறக்கூடாது. ஒரு அம்பைத் தவிர கையில் வேறில்லை. அது தப்பினுல் அதோகதிதான் ! (சில வழிப்போக்கர்கள் செல்கிரு.ர்கள்.) நின்றுகூடப்_பாராமல்,ஒவ்வொருவர்-ஒவ்வொரு நோக்கத் தோடு போகின்றனர். நானே கொல்ைமேல் குறி வைத்து நிற்கிறேன். (அருகில் இருந்த ஒரு கல் - ஆசனத்தில் அமர்கிருன்.) வீட்டிலே தவிக்கும் என் அருமைக் கண்மணிகளே ! எப் பொழுது வெளியே போய்த் திரும்பினுலும், நான் உங்க ளுக்கு ஏதாவது பொருள் கொண்டுவருவது வழக்கம் விளையாடுவதற்கு மான்குட்டி, மைனு முதலிய ஏதாவது ஒன்றைப் பரிசளிப்பேன். இன்ருே என் வேட்டை வேறு விதமாகிவிட்டது. உங்களைக் காக்கவே, உங்களை நினைத் துக்கொண்டே, இந்த வேட்டையை மேற்கொண்டிருக் கிறேன் !
பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/87
Appearance