பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 ஆரம்கதை : நாங்கள் புல் அறுத்துப் பிழைப்பவர்கள். காட் டில் வளர்ந்த புல்லை அறுத்ததற்காக என் கணவரைக் கூட்டில் அடைத்துவிட்டீர்களே! எங்களுக்கு வேறு பிழைப்பும் இல்லையே! நடோல்ப் (கவர்னரைப் பார்த்து)-இது கருணை காட்டவேண் டிய விஷயம்தான்! (பெண்ணேப் பார்த்து) இங்கே வழிமறித்து நிற்காதே! மனு எழுதிக்கொண்டு மாளிகைக்கு வா, கவனிப்போம்! o ஆரம்கதை : என் வீட்டுக்காரரை விடுதலை செய்வதாய்ச் சொன்னலொழிய நான் இதை விட்டு நகரமாட்டேன்! இதற்காகவே நான் இங்கே ஓடிவந்தேன்! இல்லாவிடில், இவ்வளவு பெரிய கவர்னர் துரையை நான் எப்படிப் பார்க்க முடியும்? ஜஸ்லர்: இந்தப் பிச்சைக்காரச் சனியன்களை விரட்டு! மேலே போவோம்! ஆரம்கதை: (எட்டி அவருடைய குதிரை லகானப் பிடித்துக் கொண்டு) முடியாது! அதெல்லாம் நடக்காது ! உமது கோபம் என்ன்ை என்ன செய்யும் இழக்க வேண்டியதை யெல்லாம் நான் இழந்தாயிற்று! இனிமேல் என்ன? சாகத் துணிந்தவளுக்குச் சமுத்திரம் எம்மட்டு ! ஜஸ்லர்: ஏ. பெண்பிள்ளை விலகிச் செல்கிருயா? குதிரையை மேலே விடட்டுமா? ஆரம்கதை : விடுமே! அப்படியாவது சாகிறேன்! ஒட்டும் ஒட்டும்! இதோ (குழந்தைகளே இழுத்துப் போட்டுக்கொண்டு பாதையை அடைத்துப் படுத்துக்கொள் கிருள்.) டோல்ப் : பெண்ணே உனக்கென்ன பைத்தியமா? ஜஸ்லர்: (திகைப்புடன்) வேலைக்காரர்கள் எங்கே தொலைந் “தனர்? இவளை வெளியே தள்ளவேண்டும்! டோல்ப் : வேலைக்காரர்கள் முன் பக்கம் போய் நிற்கிருர்கள். இடையில் கல்யாண ஊர்வலம் போகிறது. (துரத்தில் ர்ர்த்து) அவர்கள் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு வர முடியவில்லை!