பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 ஸ் குரல்கள்: இது யார் வேலை? (ஊர்வலத்தில் மேளம் ஒலித்துக்கொண்டிரும் கிறது.) டோல்ப் : இந்த ஜனங்களுக்கு என்ன, பைத்தியமா? இங்கே பிணம் கிடக்கிறது, அங்கே மணப்பறை கொட்டு கிருர்களே! அதை முதலில் நிறுத்துங்கள் ! (மேளம் திடீரென்று கிற்கிறது. மேலும் சிலர் ஓடிவந்து குழுமுகின்றனர்.) ஆரம்கதை குழந்தைகளே, நன்ருய்ப் பாருங்கள்! கொடுங் கோலன் எப்படிச் சாகிருன், பார்த்துக்கொள்ளுங்கள்! டோல்ப் பெண்மைக்குக் கூட இரக்கம் கிடையாதா! யாரா வது _உதவிக்கு வாருங்கள்-நெஞ்சிலுள்ள அம்பை வெளியே இழுப்போம்! ல பெண்கள்: அது இருக்கிற இடத்திலேயே இருக்கட்டும்' அது கடவுளின் சித்தம்! டோல்ப் நீங்கள் நாசமாய்ப் போங்கள் (அவர்களைப் பார்த்து உடைவாளே உருவுகிருன்.) டஸ்ஸி : (அவன் கையைப் பிடித்து நிறுத்தி) நிறுத்து அந்தக் காலம் மலையேறிவிட்டது! கொடுங்கோலனே தொல்ைந்து விட்டான்; நீ என்ன துள்ளுகிருய்? உங்கள் ஆட்சி ஒழிந்தது! நாங்கள் சுதந்திர மக்கள்! வாழ்க சுதந்திரம் Iல்லோரும் (ஒரே குழப்பமாக) வாழ்க! வாழ்க! (காவலர்கள் ஓடி வருகிருர்கள்.) - டோல்ப்: காலம் மாறிப் போய்விட்டது! கொலைகாரனும் தப்பிப் போய்விட்டான் ஒரே நொடியில் எல்லாம் தலை கீழாக மாறி நிற்கிறது! இனி யாரையும் நம்ப வழியில்லை! வாருங்கள் நேரே குஸ்ட்ைடுக்குப் போவோம்! மேல்விளைவு என்ன ஆகுமோ, தெரியவில்லை! (எல்லோரும் போகிரு.ர்கள்.)