பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

(பெண் குழந்தைகள் ஒரு கழியில் கவர்னர் தொப்பியை மாட்டித் தூக்கிக்கொண்டு வருகின்றனர்_தொடர்ந்து வேறு ஜனங்களும் வருகின்றனர்.)

நவோடி: நம்மை வணங்கவைக்க வந்த தொப்பி வருகிறது !
கோன்ராடு: இதை என்ன செய்யலாம், சொல்லுங்கள்?
பெரிய வால்டர் : கடவுளே ! இதே தொப்பியின் அடியிலே தான் என் பேரன் நின்ருன் !
பல குரல்கள் : இதை எரித்துப்பஸ்மமாக்க வேண்டும்!

(குழந்தைகளே தொப்பிக்குத் தி வைத்து எரிக்கிரு.ர்கள். கோட்டையை இடித்த ஜனங்கள் பலர் கூட்டமாக வந்து சுற்றிலும் வளைந்து நிற்கிருர்கள்.)

மெல்ச்தல்: ரூட்லி மகாநாட்டில் செய்த சபதத்தை நிறை வேற்றிவிட்டோம்! இனி சக்கரவர்த்தியே படைகளுடன் வந்தாலும், இந்நாட்டில் நுழைய முடியாது நாம் அனைவரும் ஒன்றுபட்டு விட்டோம்! கோன்ராடு : எல்லோரும் ஒரே இனம் நாம் எல்லோரும்
இந்நாட்டு மன்னர் ஜே சுவிட்ஜர்லந்து
எல்லோரும் : ஜே!

(ரோஸல்மன் பாதிரியாரும் ஸ்டாபாச்சரும் வருகின்றனர்.)

ரோஸல்மன்: இவைகளெல்லாம் கர்த்தரின் தீர்ப்புக்கள்!
குடியானவர்கள்: என்ன செய்தி?
ஸ்டாபாச்சர்: மேற்கொண்டும் பயமில்லாமல் ஒழிந்தது!
ரோஸல்மன் : சக்கரவர்த்தியே கொலையுண்டு மறைந்து விட்டார்!
எல்லோரும் : (நெருங்கி வந்து) கொலையா? சக்கரவர்த்தியா? என்னது? மெல்ச்தல் : இருக்காது! யார் வந்து சொன்னர்கள்?
பெரிய வால்டர் : இவ்வளவு கோரமான செயலை யார் செய்தது?
ரோஸல்மன்: திட்டமிட்டு முடித்துவிட்டார்கள் அவர் சகோதரர் குமாரர் ஜான் கோமகன்ே காரணம்-அவருக்குச் சக்கர வர்த்தி செய்த்துரோகம் உயிருக்கே உலை வைத்துவிட்டது