பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 மெல்ச்தல்: கொலைகாரர்கள் எங்கே ஓடினர்கள்?

ஸ்டாபாச்சர்: நாலு பக்கமும் சிதறி ஓடினர்களாம்; ஜான் கோமகன் மலைகளில் சுற்றி வருகிறாராம்!

பெரிய வால்டர்: கொலைகாரர்களுக்கு ஒரு பயனுமில்லை! ஆனல் நம் நாட்டுக்கு இனிப் பயமில்லாமல் தீர்ந்தது. (ஆலயத் தர்மகர்த்தா பீட்டரும், ஒரு தூதுவனும் வருகின்றனர்.)

பீட்டர்: ஆஸ்திரிய மகாராணியிடமிருந்து இந்தத் தூதுவர் திருமுகம் கொண்டுவந்திருக்கிறார்!

பலர்: வாங்கி உடைத்துப் பாருங்கள்!

பெரிய வால்டர் : (திருமுகத்தை வாங்கிப் பிரித்துப் படிக்கிறார்.) யூரி, சுவிஸ், அந்தர்வால்டன் மகாஜனங்களுக்கு, இராணி எலிஸபெத் அறிவிப்பது-உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாவதாக!

சில குரல்கள்: நல்ல காலத்தில் இல்லாத கருணை இப்போது எங்கிருந்தோ வந்திருக்கிறது!

பெரிய வால்டர்: (மனத்துக்குள் படித்துக்கொண்டு) கொலைகாரர் களுக்கு நாம் எவ்வித உதவியும் செய்யக்கூடாது என்று எழுதி யிருக்கிறது!

எல்லோரும்: இனிமேல் நமக்கு ராஜாவுமில்லை; ராணியும் வேண்டாம்!

(தூதுவன் வெளியேறுகிறான்.)

ஸ்டாபாச்சர்: இவ்வளவு கூட்டத்திலும் வில்லியம் டெல் எங்கே? நம் சுதந்திரத்திற்கு அடிப்படை அமைத்த அவனைக் காணவில்லையே! வாருங்கள், டெல்லின் வீட்டுக்குப் போய் அவனை வணங்குவோம்! வில்லியம் டெல் நீடுழி வாழ்க! எல்லோரும்: வாழ்க! வாழ்க!


காட்சி 2

டெல்லுடைய வீட்டில் ஒரு வெளி அறை. கதவு திறந்து கிடக் கின்றது, அறைக்கு அப்பால் உட்புறத்தில் அடுப்பு எரிந்துகொண் டிருக்கின்றது.

ஹெட்விக்: என் செல்வங்களே! இன்றைக்கு உங்கள் அப்பா வந்துவிடுவார்! அவரும் விடுதலையானார்; நாமும்