பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


விடுதலையானோம்; நம் நாடும் விடுதலையாகிவிட்டது! உங் கள் அப்பா, அருமை அப்பாதான் நாட்டையும் காப்பாற்றினார், தெரியுமா உங்களுக்கு

ய வால்டர்: அப்பா மட்டுமா, அம்மா ? வில்லியம் டெல், குஞ்சு வால்டர்-நாங்கள் இரண்டு பேரும் எங்கள் நாட்டைக் காப்பாற்றினோம், அம்மா! அம்பு வரும்போது, நான் அஞ்சினேனா, அசைந்தேனா, ஆடினேனா? அசைந்திருந்தால், என்ன் ஆகியிருக்கும் ! என் பேரையும் சேர்த்துத்தான் எல்லோரும் சொல்வார்கள்!

ஹட்விக்: ஆமாமடா, என் கண்ணு எல்லாப் பிள்ளைகளும் ஒரு தடவை பிறப்பார்கள்; நீ இரண்டாம் முறை உன் அம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறாய்! இந்தப் பிள்ளையைப் பார்க்க அப்பா வரப்போகிறார் இப்போது!

(கதவடியில் துறவிக் கோலத்தில் ஒருவர் வந்துநிற்கிறார்.)

வில்லியம்: அம்மா, அதோ பார் ! கதவடியில் யாரோ சந்நியாசி நிற்கிறார்-பிச்சைக்காக வந்திருக்கிறார்!

ஹட்விக் உள்ளே கூப்பிடு, ஏதாவது பலகாரம் கொடுப்போம்! மகிழ்ச்சியான வேளையில் வந்திருக்கிருர்; அவரும் பசியாறட்டும்.

(உள்ளே போய் ஒரு தட்டில் பலகாரமும் பானமும் கொண்டுவருகிறாள்.)


வில்லியம்: பெரியவரே, உள்ளே வாருங்கள்! அம்மா பலகாரம் வைத்திருக்கிறாள் !


சிறிய வால்டர்: வாருங்கள், ஐயா! வந்து களைப்பாறுங்கள் ! சந்நியாசி : (திகைப்புடன் சுற்றிப் பார்த்து) நான் எங்கேயிருக் கிறேன்? நான் இப்பொழுது எந்த நாட்டில் இருக்கிறேன்?


சிறிய வால்டர் : அதுவே தெரியவில்லையா? இந்த ஊர் பர்க்லென்-யூரி மாவட்டம் !


சந்நியாசி ; (ஹெட்விக்கைப் பார்த்து)-நீ தனியாகவா இருக்கிறாய் ? உன் கணவர் இங்கில்லையா?


ஹெட்விக்: அவரை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறேன். எந்த நிமிஷத்திலும் வந்து விடுவார் ! என்ன விஷயம் ?