பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும்பெற்ற ஆன்மா 101 யால் நரகராகவும் செல்வதால் 'மக்களை' முதற் கூறினார் என்பர். 'வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதன்றே' என்று கம்பர், மனிதனை அனைத்துக்கும் மேலாகக் காட்டி அவன் ஆற்றும் அறநெறியே வையத்தை வாழ வைக்கும் என்கின்றார். அவரைப் பாராட்டிய பாரதியும் 'கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்' என்பர். ஆம்! மனிதனாகப் பிறந்த இராமன் நிறை மனிதனாக வாழ்ந்து வரலாறு படைத்துச் சென்றான். அவனுடைய மனிதப் பண்பினைப் பல பாத்திரங்கள் வாயிலாகக் கம்பர் நூல் முழுவதும் காட்டியுள்ளார் மேலும் தேவர் களோ-வேறு யாரோ இறைவனை வணங்கி, அவனோடு இரண்டறக் கலக்கும் பேரின்பப் பெருவாழ்வு வேண்டு மாயின் மனிதனாகப் பிறந்தே செல்ல வேண்டும் என்பது உலகறிந்த உண்மை. சிவப்பிரகாசர் இந்த உண்மை யினைத் தன் பிரபுலிங்கலீலை'யில் நன்கு விளக்கியுள் Gs了打。 - கயிலையில் உமையும் இறைவனும் அமர்ந்த காட்சி யினை நன்கு விளக்கிக் காட்டும் சிவப்பிரகாசர், அவர் களுக்குள் நிகழும் ஒரு பேச்சினை ஏட்டில் எழுதுகின்றார். அம்மையார், தேவ உலகத்தில் வாழும் தேவ கணங்களும் அவர்களைச் சுற்றிய பிறரும் இறைவனை அடைய முடியுமா? என்று கேட்கிறார். இறைவன் அது இயலாது; அவரும் பூமியில் மனிதனாகப் பிறந்து-நல்ல குடியில் பிறவி எடுத்து வாழ்வாங்கு வாழ்ந்து வழுவாது அறம் புரிந்து, நலம்கண்டு இறை உணர்வுடன் வாழ்ந்தாலன்றிப் பரமுத்தி கிடைக்காது என்கின்றார். போகபூமியில் போக தனுவினால் பொருந்தல் ஆகாது ஏகமாம் இன்ப சித்தி, இயம்புரில்.கருமபூமி,