பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*108 அம்மையும் அப்பனும் வாறு வந்து ஆட்கொள்ளுகின்றான் என்பதையும் சிறித நோக்கி, இன்றைய செயலை முடிப்போம். இறைவன் தன்மையை விளக்கும் இரணியப் படலம் கம்பரால் இராமாயணத்தில் புகுத்தப்பட்டது என்பதை முன்னரே கண்டோம். இரணியன் போன்றவர்களை இறைநிலை உறுமுன் இறைவன் அவர்களை எப்படி எப்படி ஆட்கொண்டான் எனக் காட்டியுள்ளேன். பிரகலாதனின் தெய்வ நெறி அவனை மட்டுமன்றி அவன் தந்தையையும் மறக்கருணை வழி ஆட்கொண்டது. சில தவறுகளைச் செய்தால், அவை செய்பவனை மட்டுமன்றி அவன் குலத்தினையே அழிக்கும் என்பர் திருவள்ளுவர். அப்படியே சில நல்லவர்கள் செயலினாலே அவர்தம் குலமே வாழ்வு பெறும் என்பதை மனித நிலையில் மட்டு மன்றி, பிற உயிர் நிலையிலும் அறிஞர் எடுத்துக் காட்டு வர். நாரைக்கு முத்தி, பன்றிக்கருள், கரிக்குருவிக்கு உபதேசம் பற்றி நாம் காண இருக்குமிடத்தில், அவற்றால் அக்குலங்களே நலம் பெற அவை வேண்டும் வரங்களைக் காணமுடியும். இங்கு வேறு வகையான நல் உள்ளங் களைக் காணலாம். கம்பரைப் போலவே வில்லிபுத்துராரும் வியாசர் சொல்லாத ஒரு சருக்கத்தைப் புதிதாகப் படைக் கின்றார். பழம் பொருத்து சருக்கம்' என்பதாகும் அது. காட்டில் இருக்கும் போது ஒரு முனிவர் தவம் செய்து பல ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுக்கும் பழம் முதிர்ச்சி அடை ஆயும்போது, அதைக் கொண்டு உண்டு, மறுபடி தவஞ் செய்வார் போலும். ஒருமுறை கனிந்து நின்ற அப்பழத் தைப் பறித்து உண்ணுவதற்கு, அதற்கு முன் நீராட முனிவர் சென்ற போது, அர்ச்சுனன் வீழ்த்துகிறான்.அது கண்ட-கண்ணன்.அதன் சிறப்பினைக் கூறி, முனிவரின் சாபத்துக்கு அனைவரும் ஆளாக வேண்டும் என எச்சரித் தார். அது கேட்ட தருமனும் பிறரும் அஞ்சி, அக்