பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112. அம்மையும் அப்பனும் 'திருவுளத்துக் கருத்தெதுவோ அது எனக்கும் கருத்தென்றான் தெய்வமன்னான்’ என்று வில்லியார் அவனைத் தெய்வமாக்கி அவன்கருத்து, கண்ணன் எண்ணியபடி நடக்கப் போவதாகக் காட்டு கின்றார். பாரதப் போர் நடவாதிருக்க வழி உண்டா என்று கண்ணன் அவனை மறுபடியும் கேட்கின்றான். அவனும் தயங்காது உண்டு என உணர்த்துகின்றான். 'பாராளக் கன்னன், இகல் பார்த்தனை முன் கொன்று, அணங்கின் காரார் குழல் களைந்து, காலில் தளை பூட்டி நேராகக் கைபிடித்துநின்னையும் யான் கட்டுவனேல் வாராமல் காக்கலாம் மாபாரதம் என்றான்' என்பது வில்லியார் வாக்கு. ஆம்! அவன் தூய உள்ளம் உற்றார் மற்றார் என்னாது, நாடுநலிவின்றி-போரின்றி' வாழ வழி காணுகின்றது. ஆயினும் பாரதத்தை நடத்தி' நலம் காண நினைத்த கண்ணன் எண்ணமே நிறைவேறு. கின்றது. இங்கே மற்றொரு நிகழ்ச்சியினையும் வில்லியார் குறிக்கின்றார். இறைவன் தொண்டர் உள்ளத்தொடுக் கம், தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே' என்று, உயிர்களுள்-ஆன்மாக்களுள் தொண்டர்ே சிறந்த, வர் என்பதையும் அவர் உள்ளத்தே இறைவன் என்றும் நிலைத்திருப்பான் என்பதையும் அத்தகைய தொண்டர் இறைவனிலும் பெருமை உடையவர் என்பதையும் ஒளவையார் கூறுகின்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இறைவன் கூறத் திருத் தொண்டர் தொகையே பாடியுள் ளார். இறைவனே பெருமையால் எம்மை ஒப்பார்-ப்ேண