பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும் பெற்ற ஆன்மா 113 லால் எம்ம்ைப் பெற்றார். என்று அவர் பெருமையைக்" காட்டுகின்றார் இத்தகைய உண்மையினை விளக்கவும், இதற்கு மேலாக, அனைவரையும் முடிக்கத் திட்டமிட்ட கண்ணனிடமிருந்து.தம் ஐவரையும் காப்பாற்ற வேண்டி யும் அடுத்த நிகழ்ச்சி அமைகின்றது. பாரதம் வராமல் காக்க வழிகூறிய சகாதேவனை நோக்கிக்'கண்ணன், ! முன்னை நீ கூறியவை எல்லாம் முடித்தாலும் என்னைநீ.கட்டுமாறு எவ்வாறு? எனக் கேட்கின்றான். தூய உளமுடைய மனிதனாகிய சகாதேவன், 'உன்னை நீதானும் உணராதாய் உன்வடிவம் தன்னை நீ காட்டத் தளைத்திடுவன் யான்' என்கின்றான். உடனே கண்ணன் பல கோடி கண்ணன் களாக எங்கும் நிறைந்து நிற்கின்றான். நல்லான்மாவாகிய சகாதேவன் அவற்றுள் மூல புருடனின் நிலை உணர்ந்து அவன் அடியிணைகளைக் கட்டிப் போடுகின்றான். 'மாயவனும் அன்பன் மனமறிவான் கட்டுக என்று ஆய வடிவு பதினாயிரம் கொண்டான் தூயவனும் மூலமாம் தோற்றம் உணர்ந்து - எவ்வுயிர்க்கும் தாய அடியிணைகள் தன்கருத்தினால் பிணித்தான்' என்றார்வில்லியார். சகாதேவனைத் தூயவன் என்றும், இறைவனின் மூல நிலையினை அவன் கருத்தினால். கட்டினான் என்றும் கூறுகின்றார். இதனால் வெறும்.