பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 அம்மையும் அப்பனும் மனிதனாகத் தோற்றத்தால் மட்டும் இருந்தால் அம்மை அப்பன் வரமாட்டான் என்றும் தூய உள்ளமே அவன் தங்கும் இடம் என்றும் காட்டுகின்றார். இறைவனை அறியும் நற்கல்வி அறிந்தவன் உள்ளத்தே அவன் தங்கு வான் என்ற உண்மையினை அப்பரடிகள், 'கல்லாதார் மனத் தணுகாக் கடவுள் தனனைக கற்றாரும் உற்று ஒரும் காதலானை' என்கின்றார். ஆம்! இங்கே சகாதேவன் உற்று ஒர்ந்து பிடித்துப் பிணைத்து விட்டான். இனி, கண்ணன் அவன் பிடி விட்டாலன்றி வெளிவர முடியாது. அன்பர் உளக் கட்டு அத்தகையது. இங்கேதான் மற்ற்ொரு கருத்தை வில்லியார் குறிப்பாகக் காட்டுகின்றார். கட்டப்பெற்ற கண்ணன் அங்கே தனிமையில் நடந்த நிகழ்ச்சியை-சகாதேவனால் கட்டுப்பட்ட நிகழ்ச்சியை மற்றவர் அறியின் தன்னிலை கெடுவதன்றி வந்த காரியமும் நிறைவேறாது எனக் கண்டு, அன்பனிடம் ஒரு வரம் கேட்கின்றார். ‘சகாதேவா இங்கே நடந்தவற்றை வெளியே யாருக்கும் சொல்லமாட்டேன்' என்று சத்தியம் செய்து கொடு என்கின்றார். அவனும் சம்மதிக்கிறான். ஆயினும் அதற்கு முன் கண்ணனிடம் மற்றொரு வரம் கேட்கின் றான். வருகின்ற பாரதப் போரில் அனைவரையும் அழிக்க நீ திட்டமிட்டுள்ளாய்-எனவே எங்கள் ஐவரை யும் காப்பதாகச் சத்தியம் செய்து தருதல் வேண்டும்' என்று வரம் கேட்டான். இருவரும் அவரவர் கேட்ட வரத்தைப் பெறுகின்றனர். பின் பாரதப் போர் நடை பெறுகின்றது. இவற்றால் இருவரையும் பெற்ற ஆன்மா தூய்மையதாய் நாடு வாழத் தான் வாழ நினைப்பதாய் இறைவழியே தன்வழி என வாழ்வதாய் அமைந்தால்