பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும் பெற்ற ஆன்மா 115: அத்தகைய நல்லவர் வாழும் நாடு-உலகம் நலமுறும் என உணர்தல் வேண்டும். உணர்ந்து அந்த நல்ல நெறியில் இன்றைய மனித சமுதாயம் வாழத் தொடங்கினால் உலகம் சிறந்த பூஞ்சோலையாக விளங்கும் என்பது தெளிவு. இருவரையும் பெற்ற ஆன்மா அவ்விருவராலும் அவர்களால் ஆட்கொள்ளப் பெற்ற தூய்மை உள்ளமும் எவ்வுயிரையும் ஒத்து நோக்கும் பண்பும் உடைய மனிதர் களாலும் உண்டாகும் நலன்களையும் அவற்றால் ஆன்மா பெறும் நலங்களையும் நிலைகளையும் ஒரு சிறிது காண லாம். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியும், மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகனும் எவ்வுயிரையும் ஒத்து நோக்கி ஆன்ம நலம் கண்டவர்கள். அவர்கள் உலகம் உள்ளளவும் வாழ்வதோடு முல்லையும் மயிலும் என்றென் றும் இலக்கிய உலகில் நிலை பெற்று வாழும் தகுதி பெற்று விட்டன அன்றோ! இந்த உண்மை நான் மேலே காட்டிய 'மக்கள் தாமே ஆறறிவுயிரே, ஆறறிவதுவே அவற் றொடு மன்னே' என்ற தொல்காப்பியச் சூத்திரங்களின்படி நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உணர்ந்து நல்லதே செய்யும் நல்லான்மாக்களே உணர முடியும். மனிதனைப் போலப் புறத்தோற்றம் இல்லையாயினும் ஒருசார் விலங்கும் உளதென மொழிப' என்ற சூத்திரப்படி மனித உணர்வு உடைய விலங்குகளுக்கும் இந்நிலை தெரியும். அதனாலேயே, நாயனையார் நட்பு குளிர்நிழலைத் தந்து மறைக்கும் மரத்தின் நிலை பெரியோர்களால் பாராட்டப் பெறுகின்றது. எவ்வுயிரும் பராபரன் சன்னிதியதாகும், இலங்கும் உடல் அனைத்தும் ஈசன் கோயில் என்று வள்ளலாரும் பாடியுள்ளாரே. அம்மை அப்பர் மனித ஆன்மாக்களுக்கு உதவிய வரலாறுகளே பெரியபுராணம் போன்ற இலக்கியங்கள். 'குகன் எனும் மனிதனுக்கும் சடாயு' எனும் பறவைக்கும்,