பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும் பெற்ற ஆன்மா ti 17 என்று கூறி, கடைசியாகத் தன் தம்பி சுக்கிரீவனையே அடைக்கலமாகத் தந்து காக்கின்றான். 'இன்னும் ஒன்று உரைப்ப துண்டால் எம்பியை உம்பியர்கள் தம்முனைக் கொல்வித்தான் என்று இகழ்வரேல் தடுத்தி தக்கோய்' என்று கூறி மனிதரினும் மேம்பட்டு உயர்ந்து நிற்கின் றான். அவனை அடைக்கலமாகத் தந்ததை, . “மன்னவர்க்கு அரசன் மைந்த மற்று.இவன் சுற்றத்தோடும் 'உன் அடைக்கலம் என்று உய்த்தேன்' என்று கூறி இராமனினும் மேம்பாடு உடையவனாகக் காட்சி தருகின்றான். இந்நிலையில் விலங்கிடைப்பட்ட ஆன்மாக்களும் இறையருளால் இருவரின் அருளால்உயர்நிலை எய்திய காட்சி அரிய காட்சியாகும். இறைவன் மனிதருக்கு மட்டுமன்றி மற்றைய உயிர் களையும் அணைத்து அருள்பவன் என்பதைப் பரஞ்சோதி யார் மூன்று சான்றுகளோடு விளக்குகிறார். கரிக் குருவிக் கும் நாரைக்கும் முத்தி அளிக்கின்றான், பன்றிக் குட்டி களுக்குத் தானே தாய்ப் பன்றியாகி முலை தருகின்றான்; பின் அவர்களை அமைச்சர்களாகவும் ஆக்குகின்றான். இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவர் தம்மை மறந்து-தரணியை-சமுதாயத்தை நினைப்பர் என்ற உண்மையினைக் கரிக்குருவி, நாரை இவற்றின் வாயி லாகப் பரஞ்சோதியார் நமக்கு உணர்த்துகிறார். இறை வன் அருள் பெற்ற கரிக்குருவி-வலியை' என்று பெயரைப்பெற்ற அச்சிறு குருவி தான்.பெற்ற இன்பம்