பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அம்மையும் அப்பனும் ஒரு மாத்திரை கூடிய சீவன், அவற்றின் நிலை உணர்த்தும் அண்டம் எனும் மூன்றினையும் பதி-பசுபாசம் என்ற மூன்றினையும் விளக்கி, அதன் வழி நாம் வாழ வேண்டிய வகையினை விளக்குவதே என் கடமை யாக அமைகின்றது. அன்று தொட்டு இன்று வரையில் எச்சமயத்தோடும் சொல்லி விளக்கிய பொருள்கள் இவை-அறுதியிட முடியாதவை-என்றும் அழியாதவை. இவை பற்றி நான் விளக்குவது ஒருபுறமாயினும், இது வரை விளக்கிய பல பெரியோர்தம் பாடல்கள், சொற்கள், தொடர்கள் இவையே பெரும்பாலும் எனக்கு உடன் நின்று உதவின. அவற்றின் வழியேதான் நான் என் இம் மாதத்துக்கு உரிய நான்கு பொருள்களைப் பேச இருக் கிறேன். பிழையுளதேல் பொறுத்து ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். பெரியோர்களே ! இன்றைய தலைப்பு அம்மை அடித்தால்' என்பதாகும். 'அம்மை அல்லது அன்னை என்பவர் யார்' எனக் காணு முன் இப்பொருளின் இயல்பும் இணைப்பும் காணல் பொருந்துவதாகும். எனக்கு நிர்வாண்’ எழுதிய முதல் கடிதத்தில் அப்பனைப் பரப்பிரமம் என்றும் அன்னையைப் பிரகிருதி என்றும் அண்டம் அம்மையும் அப்பனும் ஆடும் இடம் என்றும் குறித்திருந்தனர். ஆயினும் அப்பன் பரப்பிரமமாக மட்டும் இருப்பவன் அல்லன்; அம்மையும் பிரகிருதியாக மட்டும் இருப்பவள் அல்லள். அவர்கள் இருவரும் யாண்டும் இணைந்து நீக்கமற நிறைந்து நிற்பதால் அண்டத்தினை அவர்கள் ஆடும் இடங்களில் ஒன்றாகக் கொள்ளலாம். தாய் அல்லது அன்னை என்பவள் தோற்ற மூலமாக இலங்குகிறாள். பிரகிருதி' என்பது உலகத்தோற்ற மூலமாகிப் பின் உலகுக்கும் G|List(55gloughstää Dg. ‘The Positive case of the world' என்று ஆங்கில அகராதி அதற்கு விளக்கம் தரும். :Mother என்ற தாயினைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்