பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

’118 - - - அம்மையும் அப்பனும் பெயர் தன் இனமெலாம் பெறுக-பெறுக இவ்வையகம்' என எண்ணுகிறது. உடனே இறைவனை நோக்கி, வலியை என்பது என் மரபினோர்க் கெலாம் பொலிய வேண்டும் எப்போதும் நீஎன ஒலிய மந்திரம் ஓதி ஓதி நான் கவியை வெல்லவும் கருணை செய்குவாய்' - (17) என வேண்டுகிறது. வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்' என்ற அப்பர் வாக்குக்கு அருஞ்சான்றாக உள்ள இறைவன் அருள் செய்கின்றான். இந்தக் குருவியின் சிறப்பினை உலக உயிர்கள்-ஆன்மாக்கள் கொள்ளின் எத்துணை நலமுண்டாகும் என எண்ணிய பரஞ்சோதி யார் பாடுகின்றார். "இக்கரிக்குருவிதான் நோற்று எய்திய வரத்தைத் தன் போல் ஒக்கலும் எளிதாய் எய்தப் பெற்றதால், உலகில் மேன்மை தக்கவன் ஒருவன் வாழத் தன்கிளை வாழ்வது என்று மிக்கவர் எடுத்துக் கூறும் பழமொழி விளங்கிற்றன்றே (22) என்பது அவர் வாக்கு. ஆம்! இறையருள் பெற்றார் "எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கும் மேலான உள்ளம் உடையவர். இதுவே இருவரையும் பெற்ற-பெற்றெடுத்த ஆன்மாவின் சித்தி இலக்கணம். இனி நாரையைப் பற்றிக் காண்போம். (இரண்டிலும் முன் பகுதியாக உள்ள இறைவனைப் போற்றும் வரலாறு கள் விரியும் எனக்கருதி இங்கே எடுத்துக் காட்டவில்லை)