பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - - -- W-- - - - - அம்மையும் அப்பனும் என நம்மையெல்லாம் அந்நல்வழிக்கு ஆற்றுப் படுத்து கின்றார், எப்பிறவி எடுப்பினும் இருவரையும் அம்மை யாகவும் அப்பராகவும் பெற்ற ஆன்மாவை அவன் கைவிட மாட்டான் என்பதை இப்பன்றிக் குட்டிகளின் கதை வழியே-இப்பாடல் வழியே விளக்கிக் காட்டிவிட்டார். பரஞ்சோதியார். ஆம்! இன்றைய பேச்சின் முழுக்கருத் தும் சாரமும் இப்பாட்டினுள் அடங்கியுள்ளதன்றோ! அம்மையையும் அப்பனையும் பெற்ற-பெற்றெடுத்த ஆன்மா எப்பிறவி எடுக்கினும் அசேதனமாயினும் சேதனமாயினும் - உயர்திணையாயினும் அஃறிணையா யினும், அப்பிறவிதோறும் அம்மை அப்பன் அந்த ஆன் மாக்களை விடாது பற்றி நின்று, வினை தீர்த்து அருளி, தான் அம்மை அப்பன் என்பதை நிறுவுவன். இது முற்றி லும் உண்மை. இந்த நல் உணர்வோடு நாம் இன்று சென்று, இந்த பதி, பசு இவற்றின் செயல் உணரும் அகிலம் பற்றியும் அளவிலா அண்ட கோளங்கள் பற்றியும் அவற்றுள்ளும் அவனே உள்ளான் என்பது பற்றியும் அடுத்த புதன்கிழமை காணலாம். வணக்கம். 'தாயாய் முலையைத் தருவானே w’ தாராதொழிந்தால் சவலையாய் நாயேன் கழிந்து போவனோ நம்பி இனித்தான் நல்குதியே தாயே என்றுன் தாளடைந்தேன் தயாநீ o என்பால் இல்லையே நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ’ (மணிவாசகர்)