பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அம்மையும் அப்பனும் தியிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி என மாணிக்க வ்ாசகர் அனைத்தும் இறைவனே எனக் காட்டியுள்ளார். உலகும் பிறவும் ஐம்பூதச் சேர்க்கையால் ஆனவையே. எனவே இவற்றைக் காட்டி, இறைவன் தம்மை மறைத்து அருள் செய்கின்றான். இந்த உலகினை யும் இதைச் சுற்றியுள்ள சூரிய மண்டலத்தையும் அதையும் கடந்த அண்டத்தினையும் அதன் வேறுபட்ட வகைகளை யும் விளைவுகளையும் பெருக்கங்களையும் இன்று பல விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர். எனினும் அவர்கள் ஆராய ஆராய அந்த அண்ட கோளம் மேலும் மேலும் விரிந்து கொண்டே செல்கின்றது. - 'அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு' என்று காதல் இன்பத்தைப் பற்றி வள்ளுவர் சொன்ன உண்மை இந்த அண்ட கோள ஆய்வுக்கும் முற்றும் பொருந்தும். சாதாரணக் கண்களால் காணும் நில எல்லை, தொலை நோக்குக் கண்ணாடி கொண்டு காண, மிகச் சுருங்கியதாக அமைந்து, காணாத எல்லை விரிவடை கின்றது. அதனினும் பெரிய ஆடியைக் கொண்டு பார்த் தால், முன் பார்த்ததைக் காட்டிலும் காணாதவை மிக மிக விரிந்து நிற்கின்றது. அப்படியே ஒவ்வொரு நிலை யிலும் அண்டத்தின் எல்லை அளவிடற்கரியதாய் 'அறிதோ றறியாமை கண்டற்றால் விரிந்து கொண்டே செல்கின்றது. இதை முற்றும் கண்டவர் இல்லை; இனியும் என்றும் காணவும் முடியாது. இறை நிலை ஒத்து-உயிர் நிலை ஒத்து-காணாது விரிந்து வளர்ந்து கொண்டே இருக்கும் இந்த அண்ட கோள எல்லை கண்டு விட்டதாக எவரும் முடிவு கட்டி விட முடியாது.