பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்தின் சுழற்சி 127 இந்த அண்டம்' என்பதை ஆங்கிலத்திலே Universe' என்று சொல்லுவர். இரண்டிற்கும் பல்வேறு வகையில் பொருள் கொண்டு, அறிஞர் தம் கொள்கையை நிலை நாட்டுவதைக் காணலாம். அண்டம் என்ற சொல்லுக்கே 'எல்லை இல்லாதது என்ற பொருள் உண்டு. அண்ட G&m offib' as drugsbó ‘An imaginary shell surrounding the earth and its accompanying sphere' arárffy 30%uju. முடியாத வகையிலே ஆங்கிலத்தில் பொருள் காண் கின்றனர். அப்படியே 'அண்டமுகடு என்பதற்கும் “Top of the imaginary shell that surrounds the Universe' என்று கற்பனைக்கு எட்டாத வகையில் அமைந்த ஒன்று எனக் காட்டுவர். இந்த அண்டம் என்று தோன்றியது? ஏன் தோன்றி யது? எப்படித் தோன்றியது? எந்த அளவினது? என்று யாரும் கூற முடியாது. நான் யார்? என் உள்ளமார்? ஞானங்களார்? என்னை யார் அறிவார்? வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல், என்று கூறியபடி ஒருவேளை இறைவனால் காட்ட முடியும். ஆனால் அண்டத்தின் எல்லையினையே காண முடியாத நாம் ஆண்டவனை எங்கே காண்பது? இந்த உலகம் உண்டான காலத்தை ஆறாயிரம் கோடி ஆண்டுகளுக்கு அப்பால் கொண்டு செல்வர் (ஒளி ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் செல்லும் தகையது) இந்த உலகம் உள்ள இந்த அண்ட கோளம் 20 கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட தென்பர். இந்த உலகம் பற்றி, இராமாயணச் சார் புடைய ஒரு தனிப்பாடல் தமிழில் உண்டு இராமாயணத் தில் இல்லாத பல கருத்துக்கள் இலக்கியங்களில் இடம் பெறுகின்றன. அகநானூற்றுப் பாடல் ஒன்று இராமாய ணத்தில் கூறப் பெறாத ஒரு கருத்தைக் கூறுகின்றது. இராமன் சேது அணை கட்டுமுன் ஆலமரத்தின் கீழ் இருந்து ஆலோசனை செய்கின்றான். ஆனால் அந்த ஆல மரத்தின் மேல் உள்ள பறவைகள் பேரொலி எழுப்ப,