பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்தின் சுழற்சி w 129 'ஈசனார் கண்டம் காறாத நான் எங்கணன் எழில் ஐந்து சிரமான நாள் எம்பிரான் மேனியது தங்கமாய் நின்றநாள் இந்திரன் இருகண் உள்ள நாள் மாசிலாச் சோமன் களங்க மில்லாத நாள் வாருதிகள் இல்லாத நாள் - மலைபிறவி அதுகளது சிறகோ டிருந்தநாள் வானின் மீன் இல்லாத நாள் காசினியில் எழுவர் சக்ரவர்த்திகள் ஆண்டதைக் கண், னன். வெகுநாளதாய் - கருதி ஒருவற்குதவி பதிலுக்கு வேண்டுபவர் கனவிலும் கண்டதில்லை - தேசிகா சரணம் புகுந்த விபீடணற்குத் தென் இலங்கை அரசுதந்து செம்பசும் பொற்கல்லை நம்மதிற்காம் என்று சிந்தைதனில் எண்ணினிரே' இப்பாடல் வழி உலகம் தோன்றி எத்தனை எத்தனை கோடி ஆண்டுகள் கழிந்திருக்க வேண்டும் என்பது தெரி கின்றதன்றோ! ஈசன் ஆலகாலவிடம் உண்ணுமுன் -பிரமன் ஐந்து சிரத்தினைப் பெற்று இருந்த நாளுக்கு முன்- இராமன் வைகுண்டத்தில் பொன்மேனியோடு பொலிந்த நாள்-இந்திரன் இரு கண்களைப் பெற்ற நாள்-சந்திரன் களங்கமில்லாதிருந்த நாள், கடலே அன்றிக் காறறுலகமே எங்கும் சூழ்ந்து-கனலே பரவி இருந்த நாள்-வானின் நட்சத்திரங்களே இல்லாத நாள்மலை,தன் இறக்கைகளோடு பறந்த நாள்-பின் ஏழு சக்ர வர்த்திகள் வாழ்ந்த நாள், இத்கனையும் இந்த உலகம்அண்டம் கண்டிருக்கிறது என்றால் இது தோன்றி எத்தனை எத்தனை கோடி ஆண்டுகள் கழிந்திருக்க வேண்டும். இதில் இம்மண் தோன்று முன் உண்டாகும் மாற்றங்களையும் சுட்டி இருப்பது எண்ணத்தக்கது. இது