பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 அம்மையும் அப்படும் ஜாம்பவான் சொன்னதோ! வேறு யார் ೧FTEಣG5ಗ್ಗ நமக்கு அது பற்றி ஆய்வு தேவை இல்லை. இதனால் உலகின் தொன்மையினை நாம் உணர்ந்து கொள்கின்றோ மன்றோ! அண்மையில் அமெரிக்க, விஞ்ஞானிகள் ஏதோ பெரிய ஆராய்ச்சி செய்து அண்டகோள எல்லையை விரைவில் காண முடியும் என்று பேசியும் எழுதியும் வந்தனர். உயர்ந்த விஞ்ஞானியாகிய ஐன்ஸ்டன் கூறியதை முன்னரே குறித்துள்ளேன். எப்படித் தோன்றியது எனக் கூறமுடியும். ஆனால் ஏன் தோன்றிற்று எனக் கூற முடியாது' என அவர் கூறியுள்ளார் (1 can say how it happens; but I can't say why it happens) 9th Gogstor– அந்த விஞ்ஞானத்தின் எல்லையில் தான் மெய்ஞ்ஞானம் பிறக்கிறது. உயர்ந்த மெய்ஞ்ஞானியாகிய நம் வாதவூரடிகள் இறைவனைப் பாடும் போது, இந்த அண்டத்தினையும் எண்ணிப் பார்க்கிறார். அதன் அளவு விரிவு-பரப்பு இவர் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக நிற்கின்றது. எனவே அதை ஒர் உவமையாகவே நமக்கு விளக்குகிறார். அது மட்டுமன்றி 'திருவண்டப் பகுதி' என்றே ஒரு பெரிய அகவற்பாவினை அமைத்து, அதில் இவ்வண்டச் சிறப்பினையும் பிறவற்றையும் கூறுகின்றார். அதற்கு முன் மேலை நாட்டார் இவ்வண்டத்தைப் பற்றிக் கூறுவனவற்றைக் காணலாம். UNIVERSE 1. All existing things, including the earth, the heavens, the galaxies and therein, regarded as a whole, the cosmos macro cosm. 2. The earth together with all its inhabitants and created things. All mankind.