பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்தின் சுழற்சி 133 எத்தனையோ? அதைச் சிறு சிறு அணுத்துகள்கள் என்கிறார் அவர். அவற்றை ஒரு வேளை எண்ணினால் கோடிக்கணக்கில் அமையும். அதைப் போல நூறு நூறு கோடியினும் மேலான எண்ணிக்கை உடைய அண்டங் களும் உலக உருண்டைகளும் உள்ளன என்கின்றார். எண்ணிக்கைக்காக மட்டும் இதைச் சொல்லவில்லை. அவற்றின் இயல்பு-அசைவு சுழற்சிக்காகவும் சொல்லு கிறார். உற்று நோக்கின் அத் துகள் அனைத்தும் தாமே சுழன்று கொண்டும் அசைந்து கொண்டும்-மெல்ல இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டும் இருப்பதைக் காண முடியும். இந்தச் சிறிய வீட்டு நிகழ்ச்சியைக் காட்டி, அளவிலா அண்ட கோளங்களின் சுழற்சியை நமக்குக் காட்டி விட்டார் மாணிக்கவாசகர். அத்துடன் அவை எழில் உடையனவாயும் காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்து கிறார். இந்த வியப்பினை-விளக்கத்தினை எண்ணிய இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பாரதியார், இவற்றை ஆக்கி இயக்கும் இறைவன் பெருங் கருணையை எண்ணி வியக்கின்றார். வாய் பாடுகிறது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய்-எங்கள் இறைவா! இறைவா! இறைவா! சித்தினை அசித்தொடு இணைத்தாய் - - அங்கு சேரும் ஐம்பூதத்தின் வியன்.உலகு சமைத்தாய் அததனை உலகமும வண்ணக் களஞ்சியம் ஆகப் பலப்பல அழகுகள் சமைத்தாய் . (எத்தனை) அடுத்து இவை அனைத்தும் உயிரும் இறை உணர்வில் ஒன்றிக் கலக்கும் நிலையினை.