பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அம்மையும் அப்பனும் 'முத்தி என்று ஒருநிலை சமைத்தாய்-அங்கு முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய் பத்தி என்று ஒருநிலை வகுத்தாய்-எங்கள் பரமா! ப) மா பரமா! என்றும் காட்டி, முடிவிலா இன்ப நிலையினையும் விளக்கி விட்டார். இவற்றால் அண்டங்கள் பல என்பதும் அவற்றுள் உள்ள உலக உருண்டைகள் எல்லையற்றன என்பதும் அவை சுழன்று கொண்டே நகர்ந்து கொண்டே இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதும் அவற்றின் எண்ணிக்கையினை யாரும் அளவிட முடியாது என்பதும் இந்த உலகக் கூட்டங்கள் யாவும் இறைவனும் அவன் சக்தியுமே வழிகாட்ட-ஆற்றுப் படுத்த அமைகின்றன என்பதும் அனைத்தும் ஐந்தொழில் நடத்தும் அம்மை அப்பரின் எண்ண அளவில் இயைகின் றன என்பதும் அறிய முடிகின்றது. இவற்றையெல்லாம் அடுக்கியே பாரதி பாடுகிறான்? 'ஆதிப்பரம் பொருளின் ஊக்கம்-அதை அன்னை எனப் பணிதல் ஆக்கம் - சூதில்லை காணும் இந்த நாட்டீர்-மற்றத் தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம் மூலப் பரம்பொருளின் நாட்டம்-இந்த மூன்று புவியும் அதன் ஆட்டம் காலப்பெருங் களத்தின் மீதே-எங்கள் காளி நடம் உலகக் கூட்டம்' என்று அவர் அனைத்தும் அருட்சக்தியின் ஆடலே என முடிக்கின்றார். இதில் காலம் பெருங்களன்' என்கின் றார்; அண்ட எல்லையைப் போன்றே கால எல்லையும் கணக்கிட முடியாதது என்கிறார். இதை மேலே ஜாம்ப வான் காட்டிய எல்லையிலும் கண்டோம். மணிவாசகர்,