பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அம்மையும் அப்பனும் சடகோபர் பெரிய திருவந்தாதியில் பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ மற்றையார் ஆவரும்நீ' என்று காட்டுகிறார். அம்மை உலகை உய்விக்கும் திறனை-தாயாய் உண்டாக்கும் திறனைச் சேக்கிழார் வாழ்வைப் பாட வந்த உமாபதி சிவனார் காஞ்சியில் அவள் அறம் வளர்க்கும் தன்ம்ையைச் சுட்டிக் காட்டுகிறார். விளைகழநி பூலோகமுழுதும் ஏரி - விரிதிரை நீர்க்கடல், வருணன் கம்புகட்டி கிளர் கலப்பை தரு உமையாள் சுவேதராமன் கிடா மறவசத் தரசன் வசத்தாள் என்றிங்கு அளவறிந்து ஆண்டாண்டு தொறும் விதை தப்பாமல் அளக்கும் அவள் கச்சி அறம் வளர்த்த மாதா ஒளிபெருகு கொழுமிகுதி எறும்பு ஈறான உயிரனைத்தும் தேவரும் உண்டு உவப்பார் அன்றே. என்று கச்சிப்பதியில் நாழிநெல் கொண்டு நானில முழுதுக்கும் உணவு தரும் அன்னை காமாட்சியாகக் காட்சி தருவதைக் காட்டுகின்றார். கச்சியில் காமாட்சி அம்மன் சன்னதித் தெருவினை அடுத்து, அறப்பெருஞ் செலவித் தெரு இன்றும் ஒரு தெருவாக அமைந்திருப்பதை அனைவரும் அறிவர். இத்தகைய மூலத்துக்கு மூலமாகிய அன்னை உயிர்களை எப்படி ஒம்புகிறாள் என்பதைத் தாயுமானவர் தெள்ளத் தெளிய விள்க்குகின்றார். 'காரிட்ட ஆணவக் கருவறையில் அழிவற்ற கண்ணிலாக் குழவியைப் போல்