பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - அம்மையும் அப்பனும் என்று கீரந்தையார் காலங்கடந்த பல்வேறு ஊழிகளை நம் முன் காட்டுகிறார். உலகு ஊழி, நீர் ஊழி, நெருப்பு ஊழி, காற்றுாழி, உரு அறிவாரா விசும்பு ஊழி, எனப் பகுத்து ஐந்தின்-ஐந்து பூதங்களின் ஆட்டத்தினையும் செயல்களையும் கூறி, அவற்றையெல்லாம் ஆக்கி, அவற்றுள்ளும் அவற்றிற்கு அப்பாலும் நின்று நிலை பெறும் ஆண்டவன் நிலையினைக் காட்டுகின்றார். இதில் வரும் நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம் என்பன கால எல்லையைக் குறிப்பன. பலப்பல கோடி ஆண்டுகள் கொண்ட நிலையில் ஒன்றற்கொன்று உயர்ந்து செல்லும் கால நிலைகளை-கணிப்பிட முடியாத பேரெண்களாகக் கொள்ளும் இவற்றை-ஒரளவு நமக்குக் காட்ட விழை கின்றார் புலவர். மணிவாசகரும், 'ஞாலமே விசும்பே இவை வந்துபோம் காலமே உனை என்று கொல் காண்பதே' என்று கூறியதை முன்பே காட்டியுள்ளேன். இவ்வாறான அண்ட கோளங்கள் எப்படி உருப் பெற்று உலக அமைப்பை உண்டாக்குகின்றன என்பதை நான் முன்னே காட்டிய படி யாரும் கண்டறியவில்லை; கண்டறியவும் முடியாது. சிவப்பிரகாசச் சுவாமிகள் இந்த உலகம் எப்படி - யார் மூலமாகத் தோன்றியது r என்பதைப் பிரமமாகிய பரமசிவம் தொடங்கி, பிரம்மா வாகிய படைத்தற் கடவுள் வரையில், அவர்தம் சமய நெறியில் நின்று காட்டுகின்றார். அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. அதன் வழி ஊழி தோறுாழி தோன்றி-வாழ்ந்து மறை யும் உலக நிலையின்ை அவர் வழியே சுட்டிக் காட்ட நினைத்தேன். அவ்வளவே!