பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்தின் சுழற்சி 143 என்று பெரியவர்கள் (பட்டினத்தார்) கூறியபடி வாழ்வு மாறி மறைபவர்களைக் கண்முன் கண்டு கொண்டே, "நாம் என்றும் இருப்போம்' என்று ஏதேதோ செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் பெரியவர்கள் தம்மை மறந்து உலகையே நினைப்பார்கள். இந்த உலக வாழ்வை நல்லவர்களுக்கு ஆண்டவனே உணர்த்துகிறார். உலகம்' என்ற ஒன்றோடு அமையாது, 'உலகெலாம் என்றும் உலகம் யாவையும் என்றும் அண்ட கோள எல்லையில் சுழன்று வருகின்ற எல்லா உலகங்களும் அவர்கள் கண்முன் காட்சி தருகின்றன. சேக்கிழார் தம் பெரிய புராணத்தினை 'உலகெலாம்' என்றே தொடங்குகிறார். மற்றும் அத்தனைப் பாடல் களுக்கும் நடுச்சொல்லாகவும் கடைசிச் சொல்லாகவும் அதையே பயன்படுத்தி உள்ளார் என்று கூறுவர். அவர் தில்லை ஆண்டவன் முன் நின்று அடியவர் பெருமையை எப்படிப் பாடுவேன் என்று ஏங்கி, இறைவனை வேண்டும் போது இறைவனே இந்த உலகெலாம் என்று அடி எடுத்துக் கொடுத்தார் என்று அவர் வரலாறு பாடிய சந்தான குரவர்களுள் ஒருவராகிய உமாபதி சிவனார் கூறுவர். இவ்வாறே இதற்கு முதல் முதல் பாடல்களாக அமைந்த திருத்தொண்டத் தொகைக்கும் சுந்தரருக்கு இறைவனே அடி எடுத்துக் கொடுத்தார் என்பது வரலாறு. இங்கே உமாபதி சிவம் கூறியதைக் காண்போம். 'அடையார்புரம்,நீறுஎழத் திருநகை செய்து அன்று ஒரு மூவரை படியின் மேல் அடிமைக் கொள்ளும் பாத பங்கையங்கள் பணிந்து நின்று