பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 - அம்மையும் அப்பனும் இறைவனை ஓத முடியுமா என்றால் அதுவும் இயலாது என்கின்றார். ஆக ஆண்டவனைப் போன்று அண்டத்தின் சுழற்சியினையும் அவற்றில் அமையும் உலகங்களையும் உணர்த்தல் அரிது; உணர்த்த முயன்ற என்னுடைய நிலையும் இரங்கத்தக்க ஒன்றாகும். கம்ப்ரோ இந்த உலகங்களையும் அவை அமைந்த அண்ட கோளங்களின் அமைப்பையும் இறைவன் வெறும் விளையாட்டாகச் செய்கின்றார் என்கின்றார். ஆக்கி, காத்து, நீக்கி, மறைத்து அருளும் இறைவன் செயல் பெருவிளையாட்டே என்கிறார். இறைவன் இவற்றை ஏன் உண்டாக்கிக் காத்து மறைக்கின்றான் என்பதை யாரால் உணர முடியும்? இதைத்தான் உயர்ந்த அறிவியல் அறிஞன் ஐன்ஸ்டைன் ஏன் உண்டாகின்றது என்பதை என்னால் சொல்ல முடியாது என்கிறான். இந்த இறைவன் அடியார் பெருமையைப் பாடவந்த சேக்கிழா ரும் மனிதனாகப் பிறந்து மாநிலத்தை வாழவைத்த திருமாலின் சிறப்பினைப் பாடவந்த கம்பரும், தாம் எடுக்கும் இலக்கியத்துக்கு முன் அம்மையப்பராகிய இறைவனின் அருளினையும் புகழையும் செயலையும் பாடியே மேலே செல்கின்றனர். இவ்வாறு பல புவவர் தம் கவிதைகளைத் தொடங்குகின்றனர். கடைச்சங்கத்துப் புலவர்களுக்குத் தலைவராக இருந்து ஒப்பற்ற திறனும் அருளும் பெற்ற நக்கீரர் முதல் முதலாகப் பாடிய தெய்வ நெறிப் பாடலாகிய திருமுரு காற்றுப் படையினை, 'உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு' என்று தொடங்குகின்றார். இங்கே உலகையும் அதன் மூல காரணமாகிய ஞாயிறு' எனும் சூரியனையும் முதலாகவே கொள்ளுகின்றார். ஞாயிறு பலர்புகழ் ஞாயிறு ஆகின்