பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்தின் சுழற்சி 147 றது. ஆம்! அது உலகம் உவப்பத் தோன்றுவதால் கடவுளை நேருக்கு நேராக நின்று வரம் வேண்டும் பக்திப் பாடல்களுள் சிறந்ததும் முதலாவதுமாகிய திருமுரு காற்றுப் படையில் நக்கீரர் இவ்வாறு உலகையும் ஞாயிறு எனும் ஓர் அண்டத்தின் நுனியாக அமையும் சூரியனையும் குறிக்கின்றார். சூரியனுடைய விரைந்த சுழற்சியினாலே துண்டாக்கப் பெற்று விடுபட்டு வந்த ஒரு சிறு துகளே உலகம் என்று இன்றைய ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். எத்தனையோ கோடி கோடி ஆண்டுகளுக்கு முன் இப் பிரிவு நிகழ்ந்து, நிலம் மெல்ல மெல்லக் குளிர்ந்து உயிர்கள் வாழும் இடமாகப் பல கோடி ஆண்டுகள் கழிந்திருக்க வேண்டும். அப்படியே இதில் உயிரினம் தோன்றி இலட்சக்கணக்கான ஆண்டுகள் கழிந்திருக்க வேண்டும். இதை ஒரளவு இன்றைய விஞ்ஞானிகள் எண்ணிக் கணக் கிடுகிறார்கள். நக்கீரர் பாடிய மற்றொரு பாடலாகிய நெடுநல் வாடை எனும் பத்துப்பாட்டில் ஒரு பாட்டாக அமைந்த அப்பாட்டினை, . 'வையகம் பனிப்ப வலன் ஏர்பு திரிதரு பொய்யா வானம் புதுப்புனல் பொழிந்தென' எனத் தொடங்குகிறார். இதற்கு உரை கூறவந்த நச்சினார்க்கினியர் 'பருவம் பொய்யாத மேகம் உலகெலாம் குளிரும்படியாகத் தான் கிடந்த மலையை வலமாக வளைந்து எழுந்திருந்து கார்காலத்து மழையைப் பெய்ததாக எனப் பொருள் எழுதுவார். ஆம்! கார் கால வரவும், அதன் முடிவில் குளிர் காலமாகிய வாடையும் பற்றிக் கூற வந்த நக்கீரர் இந்த வகையில் தம் நெடுநல் வாடையினை - நல்வாடையினைத் தொடங்குகின்றார். நல்லவர் கைப்பட்ட அல்லவும் நல்லவாம் என்பது உண்மையாக அமைய நக்கீரர் வாக்கில் நடுங்கும் குளிர்