பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்தின் சுழற்சி iáš உலகையும் அதன் மூலமாக வானத்தையும் காட்டி அண்ட முகட்டின் அளவிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றார். இவ்வாறே குறளில் பல பாடல்கள் உள்ளன. இவையன்றி நாம் மேலே கண்ட நக்கீரர் தம் திருமுரு காற்றுப்படை, நெடுநல்வாடை இவற்றை உள்ளடக்கிய பத்துப்பாட்டில் மற்றைய பெரும்புலவர்களும், இதே வகையில் உலகையும், சூரியனையும் விண்ணையும். முதலாகக் கொண் ேட தம் பெரும்பாடல்களைத் தொடங்குகின்றனர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடவந்த புலவருள் சிறந்தவராகப் போற்றப்பெறும் மாங்குடி மருதனார் த்ம் மதுரைக் காஞ்சியினை, "ஓங்குதிரை வியன் பரப்பின் 濠 முந்நீர் வரம்பாகத் தன் தூங்கும் உயர்சிமைய மலைநாழிய வியன் ஞாலத்து' என்று தொடங்குகிறார். இதற்கு நச்சினார்க்கினியர் 'அகலத்தை, உடையதாகிய நீர்ப்பரப்பின் கண்ணே. ஒங்குதிரை ஒலிக்கும் கடல் எல்லையாக தேன் இறால் தூங்கும் உயர்ந்த உச்சியினை உடைய மலைகள் தோன்றிய அகலத்தை உடைய ஞாலத்தின் கண்ணே என உரை எழுதுகின்றார் இதனால் கடல் எல்லையும் தொங் கும் ஞாலமாகிய உலகும் அதில் உயர்ந்த-தோன்றிய மலைகளும் கூறப் பெறுகின்றன. பின் அவன் நாட்டின் சிறப்பையும் நல்லார் வாழும் நலத்தையும் கூறிக் கொண்டே செல்கின்றார். இந்தப் பாட்டில் மருதனார் மற்றொரு உயர்ந்த உண்மையை விளக்குகிறார் காஞ்சி' என்றால் நிலையாமை என்பது பொருள். உலக வாழ்வு நில்ையற்றது தான் என்பதை இவ்வுலகில் நெடுஞ்செழி யன் வாழுமுன் வாழ்ந்து மறைந்த மன்னர் 'தரை இடு