பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 அம்மையும் அப்பனும் மணலினும் பலரே காண்' (236) என இவரே விளக்கு கிறார். ஆனால் நாட்டை விட்டுத் துறவு கொள்ளல்நிலையாமை அதுதான் என்று அவர் சொல்லவில்லை. உலக வாழ்வு நிலையற்றதானமையின் உள்ள வரையில் வாழ்வாங்கு வாழ்க என வற்புறுத்துகின்றார். அவ்வாறு வாழும் போது அப்பொருள்களே வாழ்வு என அவற்றுள் ஆழ்ந்து, தம்முடைய வினை மறந்து மாயையுள் மூழ்கி மாறாது, காதி விளையாடி இரு கை வீசி வந்தாலும் தாதி மனம் நீர்க்குடத்தே தான்' என்றபடி, வைய வாழ்வு வான் உலக வழிகாட்டி என்று ஒட்டி, அதே வேளையில் எட்டி நின்று வாழ வழி காட்டுகின்றார். மாயை கெடு வதாக (206) எனக் காட்டுகின்றாரே ஒழிய வாழ்வு கெடு வதாக என்று காட்டவில்லை. 'அம்மை அப்பரைப் போன்று இவ்வழி நெறியினை நல்லறமாகக் கொண்டு வாழ்வாங்கு வாழின், வானுறையும் தெய்வத்தின் மேலாகப் போற்றப் பெறுவான்' என்று அண்டச் சுழற்சி யினும் தெளிவுபடக் காட்டுகின்றார். . இவ்வாறே பத்துப் பாட்டில் பிற புலவர்களும், வையத்தையும் வானத்தையும் அவற்றை அங்கமாகக் கொண்ட அண்டத்தினையும் அதன் சுழற்சியினையும் குறித்தே தத்தம் பாடல்களைத் தொடங்குகின்றனர். ‘மணிமலைப் பனைத்தோள் மாநிலமடந்தை அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம்போல என 2-ώύ ίσδ) 35 முன்னிறுத்தித் தன் சிறுபாணாற்றுப் படை யினை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் தொடங்குகின்றார். - அகல் இருவிசும்பில் பாய்இருள் பருகி பகல் கான்று எழுதரு பல்கதிர்ப் பருதி'