பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்தின் சுழற்சி 15 என உலக முதற்காரணமாகிய விசும்பினையும் அதன் இருள் நீக்கும் சூரியனையும் முன்னிறுத்திப் பெரும் பாணாற்றுப் படையினைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் தொடங்குகின்றார். 'நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மால்' என உலகினையும், அதன் முதற்காரணமாகிய முதல் வனையும் உவமைப்படுத்தித் தம் முல்லைப் பாட்டின்ைக் காவிரிப்பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் நப்பூதனார் தொடங்குகின்றார். முல்லை நிலத்திற்கு 'மால் தலைவன் ஆதலால் அவனொடு உலகையும் இணைத்து மேலே செல்கின்றார். • . பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ண னார், வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடற் காவிரியை முதலாவதாக வைத்து, அதன் கடல் எல்லையில் அமைந்த வளமார்ந்த தமிழர்தம் தலை நகராக இருந்த புகார்’ எனும் காவிரிப் பூம்பட்டினத் தைப் பாடுகிறார். கடைசியாகிய மலைபடுகடாம்' எனும் பத்துப் பாட்டின் இறுதிப் பாட்டினை, அதன் ஆசிரியர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங்கெளசிகனார், 'திருமழை தலைஇய இருள்நிற விசும்பில் விண் அதிர் இமிழ் இசைக்கும்' எனத் தொடங்குகின்றார். இதில் உலக முதற் காரண மாகிய விசும்பினையும் உலக வாழ்வின் அடிப்படையான ம்ழையினையும் அவற்றொடு கலந்த பிறவற்றையும்