பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 அம்மையும் அப்பனும் ஆசிரியர் காட்டுகின்றார். இ வ் வா று நல்லவர் யாவருமே எடுத்த பொருளைப் பாடுமுன் உலகையும்.அதன் மூலங்களையும் அண்ட கோளத்தையும் பாடியே செல்வர். விரிப்பின் பெருகும் என அமைகின்றேன். கண்ணுக்கு எட்டாத - கருத்திற்கு அப்பாற்பட்ட-எண்ணத் தொலை யாத -ஏட்டில் எழுதிக்காட்ட முடியாத அண்டத்தினைப் பற்றியும் அதன் சுழற்சி பற்றியும் அது பற்றி அறிந்த ஒரு சில-மிகச் சிலவாகிய உண்மைகளைப் பற்றியும், அந்தப் பேரண்டத்தின் சிறு துகளாகிய-அணுவினுக்கு அணு வாகிய நாம் வாழும் இந்த உலகினைப் பற்றியும் இது வரையில் கண்டோம். நான் முன்னரே கூறியபடி இதன் விரிவு-இறைவனைப் போன்று-அம்மை அப்பரைப் போன்று அளவிடற்கரிது. எனினும் நாம் வாழும் உலகை முன்னிறுத்தி ஒரு சில கண்டோம். இனி இந்த உலகெலாம் என்ற தொடரைப் பற்றி வள்ளலாகிய இராமலிங்க அடிகளார் மிக விரிவாக விளக்கம் கண்டதைச் சுட்டிக் காட்டி இன்றைய நிகழ்ச்சியினை முடிக்கலாம் என் எண்ணுகின்றேன். - சேக்கிழார்க்கு 'உலகெலாம்' என்று அடி எடுத்துக், கொடுத்தவரே அம்பலத்தாடும் அம்மை அப்பன். எனவே இத்தொடரையே மெய்ம்மொழி என்கிறார் வள்ளலார். 'நிறைமொழி மாந்தர்' என்று வள்ளுவர் கூறிய நிறை மொழியை விளக்குகிறார். இங்கே வள்ளலார் இம்மெய்ம் மொழியாம் உலகெலாம்' என்ற முதல் தொடரைப் பல வகையில் விளக்குகின்றார். அச்சிட்ட பெருநூலில் (Royal Size 1/8) 40 பக்கங்களுக்கு மேலாக பக்கங்கள் 101-1051) இச்சொற்றொடருக்கு விளக்கம் தந்துள் ளார். அவற்றுள் பல, பலருக்கு இன்றும் புரியாதவிளங்காத-இறைவனைப் போன்று காட்டி மறைக்கும் வகையில் இருக்கின்றன. இத்தொடருக்கு மெய்ம்மை உடைய மொழி என்று வேற்றுமை வழியானும் மெய் யாகிய மொழி என்று அன்மொழி வழியானும் உரை