பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்டித்தின் சுழற்சி, 155. பருவ சத்தியுலகு. பூதோத்பவகன்ம சத்தியுலகு. யூதோத் பவ உபகார சத்தியுலகு. பூதோத்பவ உபகாரபிரேரக சத்தியுலகு. பூதாதிகார சத்தியுலகு. பூதாதிகார வதி கரண சத்தியுலகு, பூதாதிகார கரண சத்தியுலகு, பூதாதி கார பருவ சத்தியுலகு. பூதாதிகார கன்ம சத்தியுலகு. பூதாதிகாராபகார சத்தியுலகு. பூதாதிகாரோபகார பிரேரக சத்தியுலகு. பூதலய சத்தியுலகு. பூதலயாதிகரண சத்தியுலகு. பூதலயகரண சத்தியுலகு. பூதலயபருவ சத்தி, யுலகு. பூதலயகன்ம சத்தியுலகு. பூதலயோபகார சத்தி, யுலகு பூதலயோகாரப் பிரேரகசத்தியுலகு." இவ்வாறு இப்பாடலுக்கு உரை எழுதிய பின், 'உலகெலாம் என்பது பெருநோக்குடைய பெரு மொழி பூரண நிட்களத்தின் நிர்க்குணமாகத் தோன்றிய நன்மொழி எனப் பல்வேறு விளக்கங்களைக் காட்டு கின்றார். ஒரு சில தொட்டு அமைவோம். உலகு என்பதற் கென அவர் கொண்ட விளக்கம் அளப்பரிது. ஒரு சில பகர்வோம். முதலாவதாக 'உலகெலாம் என்ற பாடலுக்கு விளக்கம் தந்த வள்ளலார், பின் அடுக்கடுக்காக உள்ள பல்வேறு வகைப்பட்ட உலகுகள் (அமைப்பு-அளவைஅனாதி நிலை-பரிமாணம் போன்றவற்றை உள்ளடக்கி) எத்தனை எத்தனையோ என எடுத்துக் காட்டுகிறார் அவர் காட்டிய அத்தனை உலகுகளுக்கும் இன்று பொருள் பொதி விளக்கம் காண்பார் இல்லை எனலாம். ஆனால் அத்தனையும் இல்லையென்றோ-மாறுபட்டவை என்றோ நம்மால் சொல்லவும் முடியாது. தம்மை மறந்து இறை நிலை உற்றவற்கே-இறையுணர்வு காட்ட-அவற்றின் உண்மை நிலைகளை உணர முடியும். அத்தகைய நிறை நிலை பெற்றார் இன்று காண்பது அரிதல்லவா?